நெல்லையப்பர் கோவிலில் லக்ஷதீபத் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 1864 ஆம் ஆண்டு ஆரம்பித்து தை மாதம் அமாவாசை தினத்தன்று வருடம் தோறும் பத்ரதீபத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இத்திருவிழாவின் போது பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும். ஆறாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.

இவ்வாண்டு லக்ஷதீபத் திருவிழா இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கிற்று. 17ஆம் தேதி முதல் ஒரு வாரம் அதிருத்ர பெருவேள்வியும் நடைபெற்றது. 19ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை கோவில் நாதமணிமண்டபத்தில் தங்க விளக்குத் தீப ம் மற்றும் இரண்டு வெள்ளி விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டந. இத் தீபம் தை அமாவாசைநாளான ஜனவரி 24 இரவு 7 மணி வரை தொடர்ந்து ஜ்வலித்துக்கொண்டு இருந்தது. அன்று

மாலையே ஆலயத்தின் உள் சன்னிதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் உள் சன்னிதி, மற்றும் வெளிப் பிரகாரங்கள் ஆகிய இடங்களில் லக்ஷதீபம் ஏற்றப் பட்டது. கோவில் பிரகாரங்கங்கள் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டன. இம்முறை 12 அடி உயரம் கொண்ட சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்கு வரிசை, 18 அடி உயரம் கொண்ட மூன்று கோள வடிவ சுழலும் விளக்கு வரிசை, மற்றும் 8 அடி உயரம் கொண்ட ராட்டின வடிவில் அமைந்த சுழலும் விளக்கு வரிசை ஆகியவை ஏற்றப்பட்டன.

சிவபெருமானின் பஞ்சசபைகளில் தாமிரசபையாக இங்கு போற்றப்படுகிறது. இறைவன் நெல்லையப்பராகவும்.
வேணுவனநாதராகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நெல்லுக்கு வேலி அமைத்து மழையிலிருந்து காத்து நைவேத்யம் படைக்க அருளிய நெல்வேலிநாதன எனப் போற்றப்படுகிறார்.

நான்கு வேதங்களும் சிவனுக்கு நிழல் தருவதற்காக தவமிருந்து வரம் பெற்றன. மூங்கில் மரத்தின் நிழலில் இறைவன் எழுந்தருளினார். மூங்கில் வனத்தில் லிங்கமாக மறைந்திருந்த இறைவன் ஒருநாள் தன்னைத் திருவிளையாடல் மூலம் வெளிப்படுத்தினார்.