நீலிக்கண்ணீர் வடிக்கும் கழகங்கள்

திராவிட கழகங்களால் போலி கண்ணீர், கிண்டல், சீண்டல் என இரு தினங்களாக வலம் வந்த செய்தி, தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்து எச். ராஜா விடுவிக்கபட்டார் என்பது. ஆனால் இது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை.

காரணம் அவர்களுக்கு தெரியும், பாஜகவில் ஒருவர் இருமுறைக்கு மேல் எந்த பதவியிலும் தொடர முடியாது என்பது. பா.ஜ.கவில் சியாமா பிரசாத் முகர்ஜி முதற்கொண்டு, ஜே.பி.நட்டா வரை, பல தலைவர்கள். ஆனால் இவர்கள் யாரும் வாரிசுகளோ, குடும்ப சொந்தங்களோ இல்லை. இதுதான் பா.ஜ.க.

ஆனால் சற்று மற்ற கட்சிகளை பாருங்கள். தி.மு.க, காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, தெலுங்கு தேசம், மத சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, மக்கள் ஜனநாயக கட்சி,  தேசிய மாநாட்டு கட்சி என அனைத்து கட்சிகளுமே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகன், மகள், பேரன், பேத்தி என வாரிசு அரசியலில் ஊறியவர்கள். இது பாரதத்தில் உள்ள மற்ற கட்சிகளின் வரலாறு.

எனவே, இது குறித்து இங்கு யாரும் நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. இங்கு பதவிகள் இல்லை, பொறுப்புகள் மட்டுமே உண்டு. அதற்கென்று சில வரைமுறைகளும் உண்டு. அதை யாரும் மீறுவதில்லை. இதை குறைகூறும் தகுதியும் பிறருக்கு இல்லை. இவர்களின் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியும் இங்கு பலிக்கப்போவதில்லை.