சாயக் கழிவுகள், தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருகிறது. அரசின் சட்டங்கள் மீறப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கையூட்டுகளால் இவை மறைக்கப்படுகின்றன. இந்நிலையில், கரூர் – அமராவதி நதி மாசுபடுவது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஏன் போடக்கூடாது. இதற்காக சட்டத்திருத்தம் ஏன் கொண்டுவரக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கேட்டுள்ளது. இதற்கான பதிலை அரசிடம் கோரியுள்ளது நீதிமன்றம்.