நிலவுக்கு ஆளில்லா விண்கலம் ‘இஸ்ரோ’ மீண்டும் அனுப்பும்

”நிலவுக்கு மீண்டும் ஆளில்லாத விண்கலம் ஏவப்படும்,” என, ‘இஸ்ரோ’ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

‘சந்திரயான் – 1’ வெற்றி பெற்றாலும், அதில் சிறு பின்னடைவு இருந்தது. இரண்டு ஆண்டுகள் சுற்று வட்டப்பாதையில் வரவேண்டியது, ஒன்பது மாதங்களில், அதன் சக்தியை இழந்தது. இது போன்று நேரக்கூடாது என்ற அடிப்படையில், ‘மங்கள்யான்’ உருவாக்கப்பட்டு, அது செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக சுற்றி வருகிறது.’சந்திரயான் – 2′ இன்னும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல், நிலவின் சுற்று வட்டப்பாதையில், வெற்றிகரமாக வலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.’விக்ரம் லேண்டர்’ தரை இறங்குவதில் பின்னடைவு இருந்தாலும், நிலவில் உள்ள பனித்துகள்கள், அதன் ஆழம், பருமன், முப்பரிமான படம் ஆகியவற்றை, ‘சந்திரயான் – 2’ வாயிலாக துல்லியமாக பார்க்க முடியும்.நிலவின் பின்புறம், இருளான பகுதியின் வரைபடத்தை உருவாக்கி இருக்கிறோம். ஏற்கனவே, இரண்டு முறை, நிலவுக்கு ஆளில்லாத விண்கலம் அனுப்பி உள்ளோம். வரும் காலத்திலும் அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.