‘நாம்’ எனப்படும் அணி சேரா இயக்க மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா கண்டனம்

‘நாம்’ எனப்படும் அணி சேரா இயக்கத்தின் அமைச்சர்கள் கூட்டம், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் காரகஸ் நகரில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற, பாக்., வெளியுறவு விவகாரங்களுக்கான பார்லி மென்ட் செயலர், அந்த்லீப் அப்பாஸ், “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஐ.நா., மனித உரிமை அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.” என்றார்.

வருத்தம்

இதற்கு, கண்டனம் தெரிவித்து, அந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர், சையது அக்பருதீன் பேசியதாவது:

அணி சேரா இயக்கம், பல நாடுகள் அடங்கிய அமைப்பு. இதன் கூட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் எல்லைக்குட்பட்ட பிரச்சனை குறித்து, மற்றொரு நாடு எப்படி பேச முடியும்.

தன் சொந்த தோல்விகளை மூடி மறைக்கும் வகையில், இவ்வாறு ஒரு நாம பேசுவதை, இந்த அமைப்பு ஏற்கக் கூடாது. பயரங்கரவாதம் என்பது, சர்வதேச பிரச்சனையாக உள்ளது.

ஆனால், சில குறிப்பிட்ட நாடுகளில், பயங்கரவாதிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கின்றனர். இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக, சர்வதேச நாடுகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை.

பயங்கரவாதம், நம் குடி மக்களை மட்டும் கொல்லவில்லை. நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கிறது. நாம், பயங்கரவாதத்துக்கு எதிராக பேசும் அளவுக்கு, அதற்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது.

அனுமதிக்கக் கூடாது

     பயங்கரவாதம் என்பது, எல்லைகளை தாண்டியும் நடப்பதால், அதை தடுக்க, நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், பயங்கரவாத பிரச்சனை வரும்போது, சில நாடுகள் மேம்போக்காக நடவடிக்கை எடுக்கின்றன.

     பயங்கரவாதம், பூமி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் பிரச்சனை போன்ற அனைத்து நாடுகளையும் பாதிக்கும் விஷயங்கள் குறித்து, இது போன்ற சர்வதேச அமைப்புகளில் விவாதிக்க வேண்டும்.

     ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட, அந்த நாட்டின் பிரச்சனை குறித்து, மற்றொரு நாடு எப்படி பேச முடியும்? இதற்கு அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு, அவர் பேசினார்.