நாட்டை உயர்த்திய நோட் அவுட்

உலக பொருளாதார சீர்திருத்த வரலாற்றில் எந்த கொம்பனும் செய்யத் துணியாத கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பிழப்பு சீர்திருத்தத்தை மோடி நிறைவேற்றிய முதலாமாண்டு  நிறைவு நாள் நவம்பர் 8.

ஒரு பக்கம் லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள். மறுபக்கம் அஸ்ஸாம் பிரிவினைவாதிகள், மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள். இவர்களிடம் புழங்கும் கோடிக்கணக்கான கருப்புப்பணம். இன்னொரு பக்கம் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் ரூபாய் பாகிஸ்தானின் கள்ள நோட்டுகள். மூன்றாவதாக இந்திய அரசியல் கட்சிகளும் பெரும்புள்ளிகளும் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம்.

இவை மூன்றையும் ஒரே வீச்சில் வீழ்த்தியதனால் நஷ்டப்பட்டுப் போன மூவரும் ஒன்று சேர்ந்து நவம்பர் 8ம் தேதியை ‘கருப்பு தின’மாக கொண்டாடுகிறார்கள். சீர்திருத்தம் என்பது பழுதுபட்ட ஒரு முறையில் இருந்து பழுது நீக்கிய உயர்வான மற்றொரு முறைக்கு முன்னேறிச் செல்வது.

இதை ஏற்க முடியாதவர்கள் இருவர்தான். ஒருவர் பழைய பழுதுபட்ட முறைக்கு காரணமானவர்… காங்கிரஸ் போன்றோர். மற்றவர் பழுதுநீக்கி புதிய முறையினால் பாஜகவிற்கு பெயர் வந்து விடுமோ என்று அஞ்சும் இடதுசாரிகள், பிரிவினைவாதிகள் போன்றோர். இவர்கள்தான் பழுது நீக்கி புதிய எழுச்சி தந்த நாளை வரவேற்க மனமில்லாமல் கருப்பு தினம் கொண்டாடும் கயவர்கள்.

இந்த பால் குடிக்காத பூனைகளுக்கு நான் வைக்கும் 15 கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா?

  1. பண மதிப்பிழப்பு அறிவிப்பினால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டது வரி ஏய்ப்பவனா? வரி செலுத்துபவனா?
  2. வரி ஏய்ப்பவன் தான் என்றால், இந்நடவடிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டுமல்லவா?ஆதரிக்காமல் எதிர்ப்பது என்பது கருப்புப் பணக்காரனுக்கு ஆதரவு என்று சொன்னால் அது பொய்யா? எதிர்ப்பவர்கள் கருப்புப் பணத்தை ஆதரிக்கிறேன் என்று சொல்லத் தயங்குவதேன்?
  3. சரியான திட்டமிடல் இல்லாமல் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது என்றால் எம்மாதிரி திட்டமிடல் செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?

* இந்த தேதியிலிருந்து நோட்டு செல்லாது என கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டுமா?

* அப்படி சொல்லியிருந்தால் அத்தனை கருப்புப் பணமும் மாற்றப்பட்டிருக்காதா?

* அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்வது மூலம் நீங்கள் கருப்புப்பண ஒழிப்புக்கு எதிரானவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

  1. இந்தியா ஒரு ஏழை நாடு என்றால், 500, 1000 போன்ற உயர் மதிப்பு நோட்டுகள் 84 சதவீதம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புழக்கத்தில் விடப்பட்டது. இதன்மூலம் கருப்புப்பண ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் துணை போனது என்பதை மறுக்க முடியுமா?
  2. 2004ல், 30 சதவீதமாக இருந்த உயர் மதிப்பு நோட்டுகளின் புழக்கம் 2008ல் 80 சதவீதமாக உயர்ந்ததற்கு என்ன காரணம்?
  3. பண மதிப்பிழப்பு அறிவிப்பினால் பாதிக்கப்பட்டோர் காஷ்மீர் பயங்கரவாதிகள், பஞ்சாப், எல்லையோர பிரிவினைவாதிகள், மாவோயிஸ்டுகள். இவர்களிடமிருந்த தேச விரோத செய்கைகளுக்கான பணம் செல்லாதது ஆக நீங்கள் விரும்பவில்லையா?
  4. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க நேபாளம் வழியாக பாகிஸ்தான் அனுப்பும் கள்ள இந்திய நோட்டுகளை பண மதிப்பிழப்பு நடவடிக்கை தடுத்துவிட்டது என்பது உங்கள் கொள்கைக்கு விரோதமானதா?
  5. நவம்பர் 8க்கு முன் வங்கிகள் மூலம் புழங்கிய பணம் சதவீதமாக இருந்தது; தற்போது அது 100 சதவீதமாகி விட்டது. இது என்பதும் உங்கள் கணக்குப்படி பண மதிப்பிழப்பின் தோல்வியா?
  6. நாட்டின் வெள்ளை பொருளாதாரத்துக்கு சமமான கருப்பு பொருளாதாரமும் புழங்கி வந்தது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அதை (கருப்பு பொருளாதாரம்) பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் பெருமளவில் குறைத்ததை தாங்கள் எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?
  7. இந்தியாவில் தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனை (Cashless transaction) பலமடங்கு உயர்ந்திருப்பதை தாங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
  8. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை இடதுசாரிகள் நிபுணர்கள் உள்ளிட்ட உலக பொருளாதார நிபுணர்கள் வரவேற்றது உங்களுக்கு ஏற்பில்லையா?
  9. இதுவரை யார் சொந்தக்காரன் என்று தெரியாமல் புழக்கத்திலிருந்த அனைத்து பணமும் நான் தான் ஓனர் என பெயர் சொல்லி வங்கிக்குள் அடைக்கப்பட்டது மதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியா?
  10. கருப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணான ரியல் எஸ்டேட் மார்க்கெட் பணமதிப்பிழப்பிற்கு பிறகு 30 சதவீதம் குறைந்ததும் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது என சொல்வீர்களா?
  11. பண மதிப்பிழப்பின் தோல்விதான் இந்தியாவிற்குள் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களின் படையெடுப்பா?
  12. இந்தியா தொழில் செய்ய உகந்த நாடு பட்டியலில் 130லிருந்து 30 இடம் குறைந்து 100வது இடத்துக்கு முன்னேறியது பணமதிப்பிழப்பிற்கு கிடைத்த தோல்வியா?

பாண்டவர்களுக்கு ஊசி முனையளவும் இடம் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன துரியோதனன் போல, பணமதிப்பு இழப்பின் வெற்றியை ஊசி முனை அளவு கூட ஏற்காதவர்கள், வேறு யாருமல்ல, வரி ஏய்ப்பு செய்து தவறான வழியில் பணம் சேர்க்கும் கருப்புப் பணக்காரர்கள்தான்.

இவர்களின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.  டூ

 

***************************************************************************************************************************************************************

அரசு தந்ததும் அடைந்ததும் நம்பிக்கை!

பணமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இதன் பயன்களை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

பணமதிப்பிழப்புக்கு உள்ளான 500, 1000 ரூபா நோட்டுக்களில் 99 சதவீதம் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பிவிட்டன. அதாவது கருப்புப் பணமாக பதுக்கி இருந்தவர்களும், அதற்குரிய வரியைச் செலுத்தி அவற்றை வங்கிக்கு அளித்துவிட்டார்கள். அவர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியல் தற்போது அரசுக்குக் கிடைத்துவிட்டது. அவர்களை வருமான வரித்துறை கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. வருவாக்கு உரிய வரியை கட்டாமல் இனி யாரும் தப்பிக்க முடியாது.

வரி செலுத்தும் தனி நபர்களின் எண்ணிக்கை 25.30 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசின் வரி வருவா 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதோடு, 2017-18 நிதி ஆண்டுக்கான ­அஞீதிச்ணஞிஞு ணாச்து 42 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

ஈடிஞ்டிணாச்டூ பண பரிவர்த்தனைகள் உயர்ந்துள்ளன. 30 கோடி பேர் புதிதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளார்கள்.

அனைத்துப் பணத் தாள்களும் அரசுக்கு வந்துவிட்டதால், இனி பணத்தை அரசால் முழுமையாக கண்காணிக்க முடியும். ஏனெனில், அனைத்தும் தற்போது வெள்ளையாகிவிட்டன.

கருப்புப்பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதால், நிலம், வீடு இவற்றின் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன.

3 லட்சம் நிறுவனங்கள் முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செதுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இவற்றில் ஒரு லட்சம் நிறுவனங்கள் அரசின் தனிப்பட்ட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 163 நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இருந்து முழுமையாகத் தடை செயப்பட்டுள்ளன. பினாமி செத தனி நபர்களும் நிறுவனங்களும் கண்டறியப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து, இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்து உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அது குறிப்பிட்டுள்ளது.

நேர்மையான நடவடிக்கைகள் நேர்மையான விளைவுகளைத்தான் தரும் என்பது உறுதிப்பட்டிருக்கிறது. அரசின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. இந்த நம்பகத்தன்மைக்கு மதிப்பு அதிகம்!

ஏனெனில் நம்பிக்கைதானே எல்லாம்!

– மோகன் கணபதி