நாடோடி சோதரர் நலவாழ்வு நம் பொறுப்பு வளியுலா தெளிரல்

பாரதத்தில் 862 நாடோடி இனக்குழுக்கள் உள்ளன. இவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. நாடுமுழுவதும் சுற்றித் திரிந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் நாடோடிகள், காலோடிகள், அலைகுடிகள், மிதவை குடிகள் என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் நாடோடி மக்கள் வாழ்ந்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தாசரிகள், மணியாட்டி காரர்கள், குடுகுடுப்பைக் காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிகாரர்கள், கூத்தாடிகள், பகல்வேஷக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், வம்சராஜ்கள் என்றெல்லாம் பல்வேறு துணைக்குழுக்கள் உள்ளன.


தேசிய அளவில் 162 நாடோடி இன மக்கள் எந்த பட்டியலிலும் இடம் பெறாமல் உள்ளதால் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை கிடப்பதில் சிரமமும் சிக்கலும் உள்ளன.
நாடோடிகளுக்கு நீண்ட நெடிய மரபு உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்திலேயே பாணர், கூத்தர், விறலியர், பொருநர், கோடியர், கட்டுவிச்சி போன்றோர் நாடோடி கலைஞர்களாக இயங்கி வேந்தர்கள் முன்னிலையில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைத்திறன்களை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்று வாழ்க்கையை நடத்தியுள்ளனர்.
அதன் பிறகு ஜமீன்தார்களைப் புகழ்ந்து, கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி வெகுமதி பெற்று வாழ்க்கை நடத்திவந்துள்ளனர். நாளுக்கு நாள் ஆதரிப்போர் தயவு குறைந்துகொண்டே வந்துள்ளதால் நாடோடி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி
யாகியுள்ளது. மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் சிலவேளைகளில் முக்கிய சாலை சந்திப்புகளிலும் கூட வேடிக்கை வித்தைகளை நிகழ்த்தி காசு வசூல் செய்து வாழ்க்கையை நடத்திவரும் நாடோடி இன மக்கள் சொல்லொணா வேதனைப்பட்டு வருகிறார்கள்.
திருவிழாக்களும் சந்தைகளும் நாடோடிகளின் கலைத்தொழிலுக்கான தளங்களாக உள்ளன. இருப்பினும் முன்பு போல இப்போது அதிக ஆதரவு கிடைப்பதில்லை. இதனால் நாடோடிகள் மிகவும் நலிவுற்றுள்ளனர். நாடோடிகளிடையே இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்பதை புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. மரபு சார்ந்த கலைகளை காப்பாற்றவேண்டிய, வளர்க்கவேண்டிய கடமை சமூகத்துக்கு உண்டு. நாடோடி இன மக்களின் நலிவை நீக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக தனித்துறையை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நாடோடிகள் வாழ்வுரிமைக்காக ஆர்.எஸ்.எஸ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘பார்தி’ எனப்படும் நாடோடி மக்கள் வாழ்வுரிமைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸில் ஊக்கம் பெற்ற ‘படகே விமுக்தி விகாஸ் பரிஷத்’ 20 ஆண்டுகளாக பாடுபட்டு வருவதால் அந்த சமூக பிள்ளைகள் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண முடிந்திருக்கிறது.

One thought on “நாடோடி சோதரர் நலவாழ்வு நம் பொறுப்பு வளியுலா தெளிரல்

  1. சுருஜி ஒரு சகாப்தம். நான் அவருடைய பல்வேறு ஊழியர் கூட்டத்தில் பங்கு பெற்ற பாக்கியம் பெற்றவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1985 வரை மணிலா அமைப்பாளர் ஆக இருந்ததும் தமிழக மக்கள் செய்த பாக்கியம்.
    ஷண்முகநாதன் ஜிக்கு மாநில பொறுப்பு 85ல் கொடுக்கும்போது ஒரு வலிமையான சங்க அமைப்பை ஏற்றப்படுத்தி சுரிஜி ஒப்படைத்தார். .
    மழலை மொழியிலே சுருஜில் அவர்கள் உரை கேட்க கிடைத்த பாக்கியம் என்னை போன்று எல்லோரையும் குறிப்பாக இளைஞர் களை ஆர்வத்துடன் சங்க பணி புரிய வைத்தது.
    பொய்யான தகவல்களை திரும்ப திரும்ப தி.க.வும்,தி.மு.க.வும் சொல்லி வருவதை தமிழம் புரிந்து கொள்ள செய்தவர் மடிஜிப்புக்குரிய சூரிஜி அவர்கள்.

Comments are closed.