நல்ல முயற்சி

புவிசார் பொருட்களுக்கும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார். சர்வதேச சந்தையில் ஊக்குவிக்கும் தகுதி பெற்றதும், புவிசார் குறியீடு சான்றிதழைப் பெறவிருக்கும் ராம்நகர் பண்டா என்று அழைக்கப்படும் உருண்டையான பச்சை கத்தரிக்காய் விளையும் பகுதிகளுக்கு அபேடா அமைப்பின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். வாரணாசி விமான நிலையத்தில் நேரடி ஏற்றுமதிக்கான வசதிகள் இல்லாத காரணத்தால், லக்னோ அல்லது தில்லியிலிருந்து ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்தனர். இனி, அவை வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பச்சைப் பட்டாணி, உருண்டையான பச்சை கத்தரிக்காய் உள்ளிட்ட 1,000 கிலோ எடையிலான காய்கறிகள் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டன.