தோல்வியில் முடிந்த படம்

‘ஹிந்தி தெரியாது போடா” என்ற டி – -ஷர்ட் பிரசாரத்தை கனிமொழி, ஜகத் கஸ்பர் குழுவினர் திட்டமிட்டு, நடிகர்களை விலைக்கு வாங்கி ஒரே நேரத்தில் நடிக்க வைத்துள்ளனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிந்தியை தெரிந்தே தெரியாது என கூறியவர்கள், சொந்த பெயரையே வேறு மொழியில் வைத்துக் கொண்டு நாடகமாடியவர்களின் சினிமா சாயம் உடனேயே வெளுத்து விட்டது. கருப்பர் கூட்டம் உள்ளிட்ட ஹிந்து விரோத பிரச்சனைகளை திசை திருப்பவும், மும்மொழி கொள்கை, நீட் தேர்வுகளால் தங்கள் வருமானம் பாதிப்பதை தடுக்கவும் இவர்கள் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்று. போதிய பணம், புகழ் கிடைக்கிறது. சினிமா துறையில் நிலைக்க, இவர்களின் தயவு தேவை என்பதால் நடிகர்கள் நடிக்கின்றனர்.

T-shirts against Hindi imposition take Tamil Nadu by storm - India News

ஹிந்தி வேண்டாம் எனும் நடிகர்கள் ஆங்கிலத்தை ஆதரிப்பவர்கள், ஆங்கில வழி கல்வியை கற்றவர்கள், இவர்களின் ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காதவரை தான் என   இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ஆர்த்தி உள்ளிட்டோர் சாடியுள்ளனர். ‘நடிகர்கள் மக்களின் கலைஞர்கள், அவர்களைக் கொண்டாடக் கூடாது’ என்று எம். ஆர். ராதா கூறியது முற்றிலும் உண்மை. நடிகர்களை மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். எனவே இவர்களை வைத்து மத, மொழி, ஜாதி என சந்தர்ப்பவாத அரசியல்கள் அரங்கேறுகின்றன. இதை மக்களும் உணரத் துவங்கி விட்டனர். 100 நாள் ஹிட் ஆகும் என நினைத்து பெரிய பட்ஜெட்டில் இவர்கள் எடுத்த படம், ஒரே நாளில் பெட்டிக்குள் சென்றுவிட்டது.