தொடங்குங்கள் ஒரு மக்கள் மருந்தகம்:  ஊருக்கு உதவியாக உங்கள் பங்கு?

ங்கர் போன்ற நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் சென்னையில் ஒரு மருந்துக் கடை திறந்து பொது (ஜெனரிக்) மருந்துகளை மலிவாக விற்பது போதுமா? பாரத அரசின் ஒரு புதிய திட்டத்தின் கீழ் நாடு நெடுக 860 மக்கள் மருந்தகங்கள் (ஜன அவுஷதி கேந்திரங்கள்) நடத்தப்படுகின்றன. ஜெனரிக் மருந்துகளை விற்பதுதான் இவற்றின் ஒரே பணி. 130 கோடி மக்கள் தொகைக்கு இதுவும் போதாதுதான். என்ன செய்யலாம்?

நீங்களே ஒரு ‘மக்கள் மருந்தகம்’ திறக்கலாம். அதற்கு:

  • உங்கள் பகுதி drug control அதிகாரியிடம் உரிமம் பெறுங்கள்.
  • பார்மஸிஸ்ட் (மருந்தாளுநர்) ஒருவரை நியமியுங்கள்.
  • 120 சதுரடி இடம் தயார்செய்யுங்கள்.
  • அலமாரிகள், கடைப் பெயர்ப்பலகை  அமையுங்கள்.
  • இண்டர்நெட் இணைப்புடன் கணினி ஒன்று தேவை.
  • ஜெனரிக் மருந்து சப்ளை செய்யும் ஸ்டாக்கிஸ்டிடம் பேசி மருந்தின் தரத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் பெறுங்கள்.
  • உங்கள் கடையில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துப் பட்டியலை காட்சிப்படுத்தி பிணியாளர்களிடம் பரப்புங்கள்.
  • உங்கள் பகுதி டாக்டர்களிடம் பேசி ஜெனரிக் மருந்துகளை மருந்துச் சீட்டில் எழுதும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.
  •  உங்கள் கடைக்கு வருவோரிடம் ஜெனரிக் மருந்து மலிவானது என்றாலும் பிராண்ட் மருந்து தரமேதான்; தரத்தில் வித்தியாசம் இல்லை என்பதை எடுத்துக்கூறி புரிய வையுங்கள்.
  • ஜன அவுஷதி திட்டத்தின் கீழ் உங்களைப் போன்றவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் வரை நிதி உதவி உண்டு.
  •  பிராண்ட் மருந்துகளில் 97 சதவீத  மருந்துகளுக்கு ஈடான ஜெனரிக் மருந்துகள் உள்ளன என்பதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
  • இதய நோயாளி எடுத்துக் கொள்கிற glopidogred என்ற மாத்திரை 14 கொண்ட அட்டை ஜெனரிக் மருந்தாக வாங்கினால் ரூ. 8.54 அதை Plavix என்ற பிராண்ட்  மருந்தாக வாங்கினால் அதே அட்டை ரூ.1615.68 இதுபோன்ற உதாரணங்களை எடுத்துக்காட்டி ஏழை பிணியாளர்களின் மருத்துவச் செலவை குறைப்பதில் தோள் கொடுங்கள்.

 ஆதாரம்: சத்யமேவஜெயதே (இணைய தளம்)

தொகுப்பு: பெரியசாமி

 டெங்குவிற்கு ஒரு புதிய மாத்திரை

 (பப்பாளிஇலைச்சாறிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரை என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது)

“JURAM – D” Tablets

 * 12 வயதுக்குக் கீழே:  ½ மாத்திரை (தினம் 3 வேளை)

 * 12 வயதுக்கு மேல் : 1 மாத்திரை (தினம் 3 வேளை)

 5 நாள் வரை