தேர்தல் பயத்தில் திமுக

ஹிந்துக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்து வருகிறது தி.மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழியின் ஹிந்து விரோத செயல்பாடுகள் ஒருபுறம் இதனை அதிகரிக்கிறது என்றால், அதை மேலும் அதிகப் படுத்துகின்றன விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள். இதனால் எங்கு படுதோல்வியை சந்தித்துவிடுவோமோ என்ற பயத்தில், “என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது, நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரி அல்ல” என ஸ்டாலினும், “ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க, போராடிக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின்” என பச்சையாக பொய் சொல்லி பிரச்சாரம் செய்துவருகின்றனர். தற்போது “நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன்” என  எம்.ஜி.ஆர் ரசிகர்கள் காதில் பூ சுற்றுகிறார் ஸ்டாலின்.