தேசிய சூழ்நிலை குறித்து ஆர்.எஸ்.எஸ். சர்காரியவாக் ஸ்ரீ சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து

சி.ஏ.ஏ. தொடர்பாக: இந்த சட்டத்தில் முஸ்லிம்களை இவ்வாறு தான் நடத்த வேண்டும் என்று ஒரு இடத்திலாவது உள்ளதா?  ஹிந்துக்களுக்கு புகலிடம் அளிக்க பாரதம் தவிர்த்து வேறு நாடு இல்லை. எனவே வெளிநாட்டில் இருந்து வரும் ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். ஏராளமான ஹிந்துக்கள், பாகிஸ்தானில் பல துன்புறுத்தல்களை அனுபவித்து விட்டு, பாரதம் வந்து, டில்லியில் நடைபாதையில் வாழ்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்றால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கி இருக்காது.
லவ் – ஜிகாத் குறித்து: ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்வதை யாருமே ஆட்சேபிக்க முடியாது. ஆனால் காதல் திருமணத்திற்கும், லவ் ஜிஹாத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது. ஒருபுறம் ஒருமித்த கருத்துடன் காதலும் உள்ளது;  மறுபுறம் காதல் வலையில் மயக்கி வீழ்த்துவது மட்டுமே உள்ளது. தவறான நோக்கத்துடன் ஒரு விஷயம் செய்யப்படுமேயானால், அதை தடுக்க தேவையான சட்டம்  அவசியம்.
இந்திய – சீனா விவகாரம்: பாரதம், சீனா இடையே உறவு மேம்படுவது, இரு நாடுகளின் கையில் உள்ளது. பாரதம் எப்போதுமே பாகிஸ்தானையோ சீனாவையோ ஆக்கிரமித்தது இல்லை. நாம் எப்போதுமே ஆக்கபூர்வமாகவே செயல்பட்டுள்ளோம். நம்முடன் எத்தகைய உறவை அவர்கள் விரும்புகிறார்கள் என அவர்கள் சிந்திக்க வேண்டும். நமது இறையாண்மை, சுய-மரியாதையை நாம் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது.