தூய்மையாகும் நகரங்கள்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர், ‘நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகியவை, நகரங்களை அடுத்த 5 ஆண்டுகளில் தூய்மையாக்குவதிலும், தண்ணீர் வசதிகளை ஏற்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தும். நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0’ல் வீடுகள், வளாகங்களுக்கு நேரடியாக சென்று குப்பைகள் சேகரிப்பு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரிப்பு, அறிவியல் பூர்வமாக குப்பைகளை பாதுகாப்பாக அழிப்பது, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு அகற்றுதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை குறைத்தல் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படும். அம்ருத் 2.0 திட்டத்தில், தண்ணீர் விநியோகம் தற்போதைய 500 நகரங்களில் இருந்து, 4,800 நகரங்களுக்கு விரிவுபடுத்துதல், நகரங்கள் தற்சார்பும்  நீர் பாதுகாப்பும் பெறுவது, நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை வசதிகள், 2.68 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள், 2.64 கோடி கழிவுநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.