திருவள்ளுவர் கிறிஸ்துவரா?

உலகப் பொதுமறையான திருக்குறளை உலகிற்கு வழங்கிய திருவள்ளுவர் ஹிந்து என்பது அனைவருக்கும் தெரிந்ததே. காவித்துண்டு, ருத்திராட்சம், திருநீறு அணிந்திருந்த அவரை வெள்ளை உடை கொடுத்து மதம் மாற்ற துணிந்தவர்கள் தி.மு.கவினர். 1969ல் வரலாற்றையே மாற்றும் முயற்சியாக, மு.தெய்வநாயகம் என்பவர் ‘திருவள்ளுவர் கிறிஸ்தவரா’ என ஒரு நூல் எழுதினார். அந்த நூலுக்கு வாழ்த்துரை எழுதியவர் அன்றைய முதலமைச்சரான தி.மு.க தலைவர் கருணாநிதி. திருவள்ளுவரை கிறிஸ்தவராக மதம் மாற்ற அன்றே தி.மு.க துணை போனது இதனால் நிரூபனம் ஆகியுள்ளது. திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என விமர்சித்த ஈ.வே ராமசாமியையும் கண்டிக்காமல் இருந்ததும் இதே தி.மு.கதான் என்பது குறிப்பிடத்தக்கது.