திராவிட மாடல் மரப்பாலம்

கடந்த  27,  நவம்பர் 2022 அன்று விவேகானந்தர் இல்லம் அருகே மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இருந்து உயர் அலை பாதை வரை 263 மீட்டர் நீளத்துக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர மரப்பாலம் அமைக்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணமாக, திறந்து வைக்கப்பட்ட 10 நாட்களில் கடந்த 09.12.2022 அன்று காலை, புயல் கரையை கடப்பதற்கு முன்பே அது உடைந்து சின்னாபின்னமாகி விட்டது.இதற்காக செலவு செய்யப்பட்ட செலவு ரூ.1.14 கோடி மக்களின் வரிப்பணம் கடலில் வீணாகப்போனது.அவர்கள் சொன்னதுபோல நிரந்தரமாக பாலமாக அது அமைக்கப்பட்டு இருந்தால் அதில் இரண்டு பக்கமும் ஸ்க்ரு போல்ட் நட்டுகள் போடப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், இதனை அமைக்க எதோ சினிமா செட்டு போட்டது போல அவசர அவசரமாக வெறுமனே ஆணியை அடித்து நிறுத்தியுள்ளனர்.மரம் நீரில் ஊறிய சில மணி நேரங்களில் அது பிடுங்கிக் கொண்டு வந்து விட்டது.வழக்கம்போல, புயலில் நிரந்தர கட்டுமானங்களே சேதமாகும்போது மரப்பாலம் உடைவதில் வியப்பு என்ன?வடிவேலு வசனம் போல, சண்டையில் கிழியாத சட்டை இருக்கா, புயல் அடிச்சா இடிஞ்சு போகத்தான் செய்யும் என்று இதற்கு முரட்டு முட்டுக்கள் வேறு கொடுக்கப்பட்டன. ஆனால், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடலில் மரக்கலங்களை செலுத்தி கடலையே ஆண்டுவந்த நமது பாரத மக்கள், கடலில் மரப்பாலங்களை அமைத்துதான் பொருள்களை கப்பலில் ஏற்றவும் இறக்கவும் செய்துவந்தனர் என்பது இவர்களுக்கு தெரியாது போலும்.