தவிர்க்க முடியாத பாரதம்

டிரம்ப் பாரதத்திற்கு ஆதரவானவர், ஜோபிடன் எதிரானவர் என பலரும் கருதுகின்றனர். ஆனால் 1972 முதல் அரசியல் இருப்பவர், புஷ், கிளிண்டன் உட்பட பல தலைவர்களுடன் பணியாற்றியவர், ஒபாமா ஆட்சியில் துணை ஜனாதிபதியாக இருந்தவர் பிடன்.

தனக்கென சில தனிப்பட்ட கருத்துகள் அவருக்கு இருந்தாலும், நம் பாரதத்தையும், தற்போது உள்ள மோடியின் தலைமை, வளர்ச்சி குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கும். எனவே பாரதம் அவர்களுக்கு வெறும் சந்தை மட்டுமல்ல, அதையும் தாண்டி நட்பு நாடு, சீனாவை எதிர்க்க வல்லமையுள்ள நாடு என்பதை எல்லாம் கொண்டே அவரின் அரசியல் நகர்வுகள் இருக்கும். நம் பாரதத்தின் வெளியுறவு கொள்கைகளும் சிறப்பாக இருப்பதால் நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.