சார்பு நெறியாளருடன் சாட்டையை தூக்கியவர்கள் தற்போது சரிந்தது ஏன்?

‘இனிமேல் ஊடக விவாதங்களில் பாஜகவுடன் பங்கேற்க மாட்டோம்’ என திமுக தோழமை கட்சிகள் கூறியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு வரை இதே திமுக தோழமை கட்சியினர் தங்கள் சார்பு நெறியாளர்கள் துணையுடன் சார்பு ஊடகங்களில் பாஜகவினரை தாக்கி பேசியது ஊரறிந்ததே.

பாஜக பங்கேற்பாளரை தாக்கி பேசும் இவர்களுக்கு விஸ்வாசமாக நெறியாளர் நடந்துக்கொள்வது என இவர்கள் செய்த அழிச்சாட்டியங்களுக்கு அளவில்லை.

பாஜகவினர் தரம் தாழ்ந்து பேசுவதில்லை என்பதும், தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் யார் என்பதும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதற்கு ஒரு உதாரணமாக, சில தினங்களுக்கு முன் அம்பேத்கர் குறித்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மா. வெங்கடேசன் பேச அழைக்கப்பட்டார். ஆனால் அவர் பங்கேற்றால் அம்பேத்கரின் அளப்பறிய தேசப்பற்று, ஹிந்துமத பற்று குறித்து பேசுவார். அவர் ஏன் கிறிஸ்தவ முஸ்லிம் மதங்களுக்கு மாறாமல் புத்த மதத்திற்கு மாறினார் போன்ற பல விஷயங்கள் வெளிவரும்.

இதெல்லாம் இவர்கள் மக்களுக்கு சொல்லாமல் காக்கும் ரகசியங்கள். இவை தெரிந்தால் சொந்த கட்சி தொண்டர்கள் கூட தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதால் இவர்கள் அந்த தொலைக்காட்சி நிகழ்சியில் அவரை பங்கேற்க விடாமல் செய்தனர்.

இது போன்றே ராஜா, கே.டி. ராகவன், அஸ்வத்தாமன், அண்ணாமலை, மதன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரால் கழகங்கள் மறைக்கும் பல உண்மைகள், ஹிந்து விரோத செயல்பாடுகள் என பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. திராவிட மாயை கலைகிறது. மக்கள் விழிப்படைந்து வருகின்றனர்.  இதுதான் இவர்கள் பின்வாங்குவதன் ரகசியம் என தோன்றுகிறது.