தர்மம் என்றும் வெல்லும்!

பூகம்பம் – சுனாமி – பேய் மழை – வெள்ளப் பெருக்கு – கடல் சீற்றம் – நில நடுக்கம்போன்ற இயற்கை சீற்றங்களுக்குக் கூட ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று சொல்வது மட்டும் தான் இனி பாக்கி இருக்கிறது. நல்லவேளை டெங்கு காய்ச்சலுக்கும், துவரம் பருப்பு விலை ஏற்றத்துக்கும் கூட ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று இதுவரை சொல்லவில்லை. புளுகி வருகின்ற சில கூட்டத்தார் இனி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை என்ன?
ஆர்.எஸ்.எஸ். துவக்க காலம் தொட்டே ஜாதிய அமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஹிந்து சமுதாய ஒற்றுமையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடி நாதமாகும். 1969-ல் உடுப்பியில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிந்து மதமோ, சாஸ்திரங்களோ தீண்டாமையை ஆதரிப்பதில்லை என்று அந்த மாநாடு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தது. அந்த தீர்மானத்தை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஸ்ரீ குருஜி கோல்வால்கர்.
RSSகடந்த ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அனைத்து சமுதாயத்தினருக்கும் நீர்நிலை (குளம்), கோயில், மயானம் ஆகிய மூன்றும் பொது என்ற நிலையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் பழங்குடி மக்கள், மலைவாழ் மக்கள், பின் தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் சுமார் 1,50,000 தொண்டுப் பணிகள் நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பலமாக இருக்கும் கிராமங்களில் ஜாதிச் சண்டையோ, தீண்டாமைக் கொடுமையோ இல்லை என்றே சொல்லலாம்.
ஹிந்துக்கள் ‘பசு’வை கோமாதாவாக வணங்கி வருகிறார்கள். முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதற்காக பசுவைக் கொன்றார்கள். குர்ஆனில் எங்கும் பசு மாமிசம் சாப்பிடவேண்டும் என்று சொல்லவில்லை. முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிற காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் தான் ‘மாட்டுக்கறி’ மேய்வதில் இறங்குகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தூய்மையான, தேசிய இயக்கம். அதன் மீது புழுதிவாரி தூற்ற நினைப்போரின் பொய்ப் பிரச்சாரம் வெற்றி பெறப் போவதில்லை. ஏன் என்றால் என்றுமே தர்மம் தான் வெற்றி பெறும்.