தமிழக கலாசாரத்தை அழிக்க துடிக்கின்றனர்: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

 

சென்னை கவர்னர் மாளிகையில் “பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு” மற்றும் “தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு” என்ற தலைப்பிலான இரண்டு புத்தகங்களை கவர்னர் ரவி வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள். ஆங்கிலேயர் சென்ற பிறகும் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் உண்மையை சொல்லவில்லை. ராமேஸ்வரம் கோயில் கோபுரம் வண்ணப்பூச்சு இல்லாமல் பொழிவின்றி காணப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.