ஜேடியு கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த தலிம் தபோ, ஹயங் மாங்ஃபி, ஜிக்கி டாகோ, டோா்ஜி வாங்டி, கா்மா, டோங்ரு சியாங்ஜு, கங்காங் டாகு ஆகிய 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனா்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, டோங்ரு சியாங்ஜு, கா்மா, கங்காங் டாகு ஆகிய மூவருக்கும் கட்சித் தலைமை கடந்த நவம்பா் 26-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியதுடன், சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தச் சூழலில் இவா்கள் 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனா்.

இதேபோல், அருணாசல் மக்கள் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவான கா்நோ நிகியாரும் பாஜகவில் இணைந்துள்ளாா். கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கெனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாா்.

பாஜகவில் இணைவதற்கு இவா்கள் அளித்த விருப்ப கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக, மாநில பாஜக தலைவா் பி.ஆா்.வாகே கூறினாா்.

தற்போது பாஜக 41 சீட்டு உள்ளது. 15 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியு 7 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 7 எம்எல்ஏக்களின் கட்சித் தாவலுக்குப் பிறகு, பாஜக உறுப்பினா்களின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஜேடியு கட்சிக்கு ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளாா். காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றில் தலா 4 எம்எல்ஏக்கள் உள்ளனா்.