ஜனாதிபதி உரையுடன் இன்று துவங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் இன்று (ஜன.,31) காலை 11 மணிக்கு துவங்குகிறது. இந்த கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடத்தப்பட உள்ளது.

ஜன.,31 முதல் பிப்.,11 வரை முதல் பகுதியும், மார்ச் 2 துவங்கி ஏப்.,3 வரை 2வது பகுதியும் நடைபெற உள்ளது. இதில் பிப்.,1 ம் தேதி 2020-21 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட்.

முன்னதாக ”பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி , எதிர்க்கட்சிகள் எழுப்பும் எல்லா பிரச்னை குறித்தும் விவாதிக்க, அரசு தரப்பு தயாராக உள்ளது,” என, டில்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடி உறுதி அளித்தார்.