ஜகதீஸ் சந்திரபோஸ்

மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் பணிபுரிந்தார். அவ ருக்கு முழுசம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் போஸ். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம் தந்தது ஆங்கிலேய அரசு.

முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய எண்ணம் தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் குறித்து சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் ஆய்வில் தானே இறங்கினார் போஸ்.  அவர் கண்டுபிடித்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து, மீண்டும் அதை திரும்பப்பெறும் மாயத்தை செய்தது. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன.

மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்தார். அதைக்கொண்டு ஒரு ‘பெல்’லை ஒலிக்க வைத்தும் வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ்.

அதாவது உலகின் முதல் ரேடியோ உருவானது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி, ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார். போஸ் செய்த ஒரு தவறு, தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேட்டன்ட் செய்ய மறுத்தார்.  ‘என் தந்தையைப்போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை’ என்றார். போஸ் கண்டுபிடித்த கருவியை தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி.

உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று ஐ.இ.இ.இ அமைப்பு அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார் என்று இனிமேல் யாராவது சொன்னால் தலையில் கொட்டி அதை கண்டுபிடித்தது இந்தியன் போஸ் என்று பெருமையாக சொல்லுங்கள்.

ஜகதீஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இன்று