சேவாபாரதியின் உத்கர்ஷ் முன்முயற்சி

தேசிய சிந்தனை கொண்ட, தேசமெங்கும் பல்வேறு சேவைகளை செய்து வரும் இரு லாப நோக்கற்ற தேசிய அமைப்புகளான சேவாபாரதி மற்றும் தேசிய மருத்துவ அமைப்புடன் (என்.எம்.ஓ) இணைந்து ‘உத்கர்ஷ்’ என்ற பெயரில் டெல்லி ஜிபி சாலையில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, இந்த முயற்சியில், தேவைப்படுபவர்களுக்கான மருத்துவ முகாமாக சிறிது காலத்திற்கு முன்பு இது தொடங்கப்பட்டது. இப்போது அது வாராந்திர கிளினிக் வசதியாக மாறியுள்ளது. இந்த முன்முயற்சியானது, தற்போது பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு வசதியற்ற மற்றும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட அடுக்குகளுக்கு மருத்துவ உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூக ரீதியாக நலிவடைந்த, சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது, மறுவாழ்வு அளிப்பதில் சேவாபாரதி முக்கியப் பங்காற்றி வருகிறது. இவர்களுக்காக ஆனந்த நிகேதன், அபராஜிதா போன்ற தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேவாபாரதியின் இத்தகைய பல்வேறு முன்முயற்சிகள், பாலியல் தொழிலாளர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடன் நடத்தும் கருத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.