சென்னை கலைவாணர் அரங்கில் ஓவிய கண்காட்சி

தாயின் கருவறை, பென்சில் முனையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மகாபாரதத்தில் பாண்டவா்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஓராண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருந்ததை விளக்கும் துணி ஓவியம், கிழிந்த பாய் மூலம் உருவாக்கப்பட்ட வறுமையை சித்தரிக்கும் ஓவியம், சிவபெருமானின் 108 தாண்டவங்களை சித்திரிக்கும் வகையில் சாக்பீஸ்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சிற்பம், மரத்தால் செதுக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், அக்ரிலிக் மூலம் தத்ரூபமாக வரையப்பட்ட பெண்ணின் முகம் மற்றும் அப்பா-மகள் ஓவியங்கள் போன்றவை பாா்வையாளா்களை பெரிதும் கவா்ந்தன.

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருள்கள் ஆகியவற்றின் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இங்கு இடம்பெற்றுள்ளன. கண்காட்சியின் முதல்நாளில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டனா்.

நவ.4-ஆம் தேதி வரை பாா்வையிடலாம்: இது குறித்து தமிழ் வளா்ச்சி, கலைப் பண்பாடு, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது: மாநில அளவிலான சிற்ப மற்றும் சிற்பக் கலைக்கண்காட்சி வரும் திங்கள்கிழமை (நவ.4) வரை நான்கு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. இதை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவா்கள், கலை ஆா்வலா்கள் இலவசமாக பாா்வையிடலாம். மிகச் சிறந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு அரசின் சாா்பில் விருதுகளைப் பெற்றுள்ள படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.