உள்ளாச்சி தேர்தலுக்கான அடுத்த கட்ட வேலைகளில் மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் பணிகளில், மாநில தேர்தல்ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, அக்டோபர், 30ல் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.இதற்காக, புதிய மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது

வரும், 5, 6ல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு, தேசிய தகவல் மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்த படுவதால் தற்போது, கைவசம் உள்ள ஓட்டுப் பெட்டிகளுடன், கூடுதல் தேவையை சமாளிக்க, கேரளாவில் இருந்தும், ஓட்டுப் பெட்டிகள் தருவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்காளரும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என, நான்கு ஓட்டுகளை பதிவு செய்ய உள்ளனர்.இதற்காக, நான்கு வண்ணங்களில், ஓட்டுச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் விரைவில் துவங்கவுள்ளன.