சூரிய சக்தி மின் திறன்; தமிழகம் 4வது இடம்

தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.
இதனால், தனியார் நிறுவனங்கள் நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன; பெரிய கட்டடங்களில் குறைந்த திறனில் கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கவும் ஆர்வம் காட்டுகின்றன.

கடந்த ஜனவரி நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையம் நிறுவுதிறனில் ராஜஸ்தான், 18,795 மெகாவாட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 10,548 மெகாவாட்டுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும்; கர்நாடகா, 9,463 மெகாவாட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தமிழகம், 7,426 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதில் கூரை சூரியசக்தி மின்சாரத்தின் பங்கு, 449 மெகாவாட். தற்போது மின் தேவை
அதிகரிப்பிற்கு, மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது முக்கிய காரணம்.
எனவே, பிரதமரின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அதிகளவில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பதன் வாயிலாக, மின் வாரியத்தின் சுமை குறையும். தனியார் மின் கொள்முதலும் குறையும் என்பதால், மின் வாரியத்தின் செலவுகள் கணிசமாக சரியும்.