சுவாமி சகஜானந்தர்

ஆரணி, மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் சுவாமி சகஜானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் முனுசாமி. அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் கல்வி பயின்றார். அந்தப் பள்ளித் தலைமை, மாணவர்களை கிறித்தவ மதத்துக்கு மாற்ற முயன்றபோது, அதனை எதிர்த்து பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பினார். இதுபற்றி அவர் ’மிஷனரிகள் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் எங்களை கிறிஸ்தவர்களாகச் சொன்னார்கள். நான் கிறிஸ்தவனாக மாட்டேன் என்றேன். அப்படியானல் சாப்பாட்டிற்குப் பணம் கொடு என்று சொல்லி, நான் சாப்பிட்டதற்கு பணம் வசூலித்துவிட்டார்கள்.’ என்றார். தன் 17வது வயதில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டார்.

பல சமுதாய பெரியோர்கள் துணையாலும், பல்வேறு நாடுகளில் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவாலும் கிடைத்த நிதியைக் கொண்டு பட்டியல் சமூக மக்களுக்காக நந்தனார் உண்டு உறைவிட பள்ளியை நிறுவினார். சுவாமி சகஜானந்தர் 1926ம் ஆண்டு  முதல் தொடர்ந்து 34 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பட்டியலின மக்களின் உரிமைக்காக போராடியவர். அண்ணாதுரை, ”சுவாமி சகஜானந்தா வேட்பாளாராய் இருக்கும் வரை தி.மு.க அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாது” என கூறினார். தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ள நல்ல பல திட்டங்கள் கிடைக்க பணியாற்றியுள்ளார். ஒழுக்க நெறிகளை பரப்பிய சுவாமி ‘சட்டமன்ற தந்தை’ என அழைக்கப்பட்டார்.

சுவாமி சகஜாநந்தர் ஒரு ஆன்மீகவாதி, சமூக சீர்த்திருத்தவாதி மட்டுமல்ல, அவர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நல்ல புலமை கொண்டவர். வ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜாநந்தர் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். வ.உ.சி. மறைந்தபோது அவரது குடும்பத்துக்காக முன்னின்று நிதி திரட்டியளித்தார். ஹிந்தி எதிர்ப்பு பொய்யர்கள் மத்தியில், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும், சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என குரல் கொடுத்தவர் சுவாமி சகஜானந்தர்.