ஹிந்து பண்பாடு

முஸ்லிம் நாடான வங்காளம், பரிசலில், இந்த ஆண்டு ஜனவரி 12ல், ஒரு ஹிந்து கோயிலை சில முஸ்லிம் கும்பல் எரித்துள்ளது. மேலும் அந்த கும்பல் கோயிலில் உள்ள மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தையும் திருடிச் சென்றுள்ளது. ஜனவரி 19ல் சந்திப்பூர் பகுதியில் உள்ள மற்றொரு ஹிந்து கோயிலை முஸ்லிம் கும்பல் தாக்கி சூறையாடியது. கோயில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு உள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கு வாழும் சிறுபான்மையின ஹிந்துக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. வங்காள அரசும் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.ஆனால், நம் பாரதம் நல்லெண்ண அடிப்படையில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக பங்களாதேஷுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.