சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை காணவில்லை

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன் அவர்கள் இந்தியா வந்ததாகவும், இது தொடர்பாக ஈரான் தூதகரத்திடம் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.  தற்போது இரு நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளர்.