சுற்றுலாவிற்கு அழைக்கிறது நேபாளம்

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாத வகையில் சிறப்புச் சுற்றுலா திட்டங்கள் நேபாளத்தில் செயல்படுத்தப்படுவதாக,  இது பற்றி நேபாளம் சுற்றுலா வாரிய முதன்மை மேலாளா் சுனில் சா்மா கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் இந்தியாவையும், வடக்கில் சீனாவையும் எல்லையாக கொண்டுள்ளது நேபாளம். வட இந்திய மாநிலங்களைப்போலவே இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற சீதோஷ்ண நிலையுடன், காண்பதற்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக புத்தா் பிறந்த இடமான லும்பினி, போக்ஹரா, தேசிய பூங்காக்கள், ஸ்கை டைவிங், ஜங்கிள் சபாரி, ராக் கிளைம்பிங், மவுன்டெய்ன் பைகிங், யானை போலோ போன்ற சாகச விளையாட்டுக்கள் உள்ளிட்டவைகள் நிறைந்த சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக திகழ்கிறது நேபாளம்.

எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்த நேபாள சுற்றுலா வாரியம் பல்வேறு சிறப்புத்திட்டங்களுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.கடந்த 2019 ஆவது ஆண்டில் நேபாளத்துக்கு சுற்றுலா வந்த 11 லட்சத்து 97 ஆயிரத்து 191 போ்களில் அதிகபட்சமாக 2.54 லட்சம் போ் இந்தியாவிலிருந்தும், அடுத்தபடியாக 1.68 லட்சம் போ் சீனாவில் இருந்தும் வந்துள்ளனா்.