சில வீடுகளில் உணவருந்தும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதால் கோயில் உள்ளே செல்லாமல் வெளியிலிருந்தே வணங்கலாமா?

– பா. வானமாமலை, ஸ்ரீ வைகுண்டம்

வயதானவர்கள், உடல் நலம் குறைவானவர்கள், நடமாட முடியாதவர்கள் போன்றவர்கள் கோபுர தரிசனம் செய்தாலே  போதுமானது. ஆனால், உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஆலயத்தின் உள்ளே சென்று இறைவனை  வணங்கி  வருவதுதான்  நியாயமானது.

* பரதனாரே…  ஆசை, பேராசை  இரண்டுக்கும்  என்ன  வித்தியாசம்?

– பார்வதி பிரபு, கருப்பூர்

ஆசை என்பது தேவையானதுதான். ஆசை இருந்தால் மட்டுமே ஒருவன் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய முடியும். ஆனால் ஆசைகளை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்வரை தான் நாம் சந்தோஷமாக வாழமுடியும். ஆசைகளின் கட்டுக்குள் நாம் சென்று விட்டால் நாம் நிரந்தர அடிமைதான்.

crow

– செ. தெட்சிணாமூர்த்தி, திருவாரூர்

இதுதான் ஹிந்துத்துவம். எல்லா உயிர்களையும் நேசிப்பது. பல வீடுகளில் பூனை, நாய்க்கு எல்லாம் உணவிடுகிறார்கள். சிலர் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி, பெற்றோர் இப்பிறவியில் காக்கையாகப் பிறந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். அது சரி.. கா..கா” என்று கூப்பிட்டால் காக்கா மட்டும்தானே வருகிறது!

பெண்களிடம்  வயதைக்  கேட்கக் கூடாது  என்கிறார்களே ஏன்?

– சினேகப்ரியா, தக்கலை

பெண்கள் உண்மையான வயதைச் சொல்ல விரும்பமாட்டார்கள். தங்களை எப்போதும் இளமையாக காட்டிக்கொள்ள விரும்புவார்கள். பொதுவாக பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் சம்பளத்தையும் கேட்பது ‘இங்கிதம்’ இல்லை என்பார்கள்.

புதுச்சேரி  கவர்னராக  கிரண்பேடி  பதவி ஏற்றது  பற்றி?

– வ. வெங்கடராமன், குடியாத்தம்

கிரண்பேடிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அவர் காலில் விழுந்து வணங்கினார். உடனே கிரண்பேடி, பதிலுக்கு அந்த எம்.எல்.ஏ காலில் விழுந்து வணங்கினார். அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த எம்.எல்.ஏவிடம் இனி யார் காலிலும் விழக்கூடாது என்று புத்திமதி கூறினார். டெல்லி ஒரு நல்ல முதல்வருக்கு வாய்ப்பளிக்க தவறிவிட்டதே என்று தோன்றுகிறது.

* தமிழகத்தில்  பாஜக  எப்போது  வளரும்?

– குரு. சேதுராமன், கோட்டூர்

கண்டிப்பாக வளரும். பாஜகவினர், மோடியின் சாதனைகளை மக்களிடத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக கொண்டு போக முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, தேர்தல் காலத்தில் மட்டுமல்லாமல், மற்றைய காலங்களிலும் மோடி போல உழைக்கணும். அவரவர் பகுதிகளில் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடி உள்ளூர் தலைவராகணும்.

ராகுல்  விரைவில் காங்கிரஸ்  தலைவர் ஆகிறார்  என்ற  செய்தி  பற்றி?

– பாரிமைந்தன், திருப்பூர்

இப்போது ராகுல் வரட்டும்… அடுத்து பிரியங்கா வரட்டும்…

மூழ்கிக் கொண்டிருக்கிற கப்பலுக்கு யார் கேப்டனா இருந்தா என்ன?

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.