சரஞ்சரமாகக் கணைகள்

துணை ராணுவ வீரர்கள் 44 பேர் பலியானார்கள்.  வெற்று அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தற்போது மோடி அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல், உரிய நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.  இதை ஏற்று நியூார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்முத் குரேஷியும் சந்தித்து முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்திருந்தது பாரதம்  தற்போது அதை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில்
ஜெய்ஷ்-எ முகமதுவின் தளபதிகளில் இருவர் சுட்டு கொல்லப்பட்டார்கள். ஈரானும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானை நம்பிக்கை மிகுந்த நாடு என்ற பட்டியலிருந்து நீக்கி பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.    தற்போது சிந்து நதியின் உபரி நீர் பாகிஸ்தானுக்கு கொடுப்பதை நிறுத்தி காஷ்மீர் மாநிலத்திற்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   (தானாகவே முன் வந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் சீனாவின் பொருட்களை வாங்குவதில்லை என நொய்டா மாவட்ட வியாபாரிகள் முன் வந்தது, முன்பு நடக்காத ஒரு நிகழ்வாகும்.)