சமுதாயத்தில் நாம், சமுதாயத்திற்காக நாம்!

நம்முடைய குடும்பங்களை விழிப்படைய செய்வது; நம் குடும்பம் மூலம் மற்ற குடும்பங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுஇதுவே குடும்ப ப்ரபோதன்.

குடும்பம் என்றால் என்ன?

நம்முடைய தாய் தந்தை போன்ற உறவினரோடு ஒன்று கூடி ஒரே இடத்தில் வாழ்வதை குடும்பம் என்று குறிப்பிடுகிறோம்.

குடும்பத்தில் நம்முடைய பங்கு என்ன?

குடும்பத்தில் ஒவ்வொருவருடைய பங்கும் மாறுபடும். பொதுவாக அனைவரிடமும் அன்பாக பழகுதல், பெரியவர்கள் சொல்படி நடத்தல், அவர்களுக்கு உதவி செய்தல், நல்ல பழக்கங்கள் வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை.

family ஏன் தேவை?

மனித சமுதாயம் தனிப்பட்டு வாழப் பழகாதது. இயற்கையோடும், பிற மனிதர்களோடும் சேர்த்து வாழவே பழக்கப்பட்டது. சேர்ந்து வாழ்தலின் வளர்ச்சியே குடும்பம். குடும்பம் சிதைந்தால் சமூகம் சீர்குலையும்.

குடும்பம் அமைப்பு இன்று சீர்குலைய காரணம் என்ன?

மேற்கத்திய எண்ணங்களின் தாக்கம், ஊடகம் மூலம் பரப்பப்படும் தவறான எடுத்துக்காட்டுகள், தன்னை, தனிநபரை மட்டும் மையப்படுத்தும் இன்றைய கல்விச் சிந்தனை.

இவைகளை தடுப்பதற்கான வழிகள் யாவை?

நாம் குடும்பத்தோடு வாழ்வதை சீராக்கிக் கொள்ள வேண்டும், பிற குடும்பங்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். குடும்ப ப்ரபோதனே சிறந்த வழி.

குடும்ப ப்ரபோதன் ஏன் தேவை?

இன்று குடும்பங்களில் இணக்கம் குறைந்து வருகிறது. ்எஞுணஞுணூச்ணாடிணிண எச்ணீசு என்று சொல்லக்கூடிய தலைமுறை இடைவெளி அதிகரிக்கிறது. குடும்பங்களிடையே உறவு மிகவும் குறைந்து காணப்படுகிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

* வாரமொருமுறை நம் குடும்பத்தோடு உட்கார்ந்து குடும்பத்தைப் பற்றியும் குடும்பத்தினர் பற்றியும் நல்ல விஷயங்களை சிந்தித்தல்.

* வார சந்திப்பில் தவிர்க்க வேண்டியவை: கிரிக்கெட், சினிமா, அரசியல் பேச வேண்டியவை: நமது குடும்ப பெருமிதம், நமது குடும்ப முன்னோர்களின் விசேஷ அம்சங்கள், குலதெய்வ வழிபாடு, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வளர்ச்சி, மேன்மைக்காக நம்மால் என்ன செய்ய முடியும், நமது குடும்பத்தில் சரிசெய்ய, கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

* ஒன்றாக சேர்ந்து குடும்பத்தில் முடிவெடுத்தல்.

* அதே போல் ஐந்து (அல்லது) ஆறு குடும்பங்கள் ஒன்று கூடி ஒரு இடத்தில் சந்தித்து  நம்மை சுற்றி நடந்த நல்ல விஷயங்கள் பற்றி கலந்துரையாடுதல்.

இதனால் வரும் மாற்றங்கள் ஏதாவது?

நம்முடைய குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். மேலும் சமுதாயத்தோடு இணக்கமாக வாழ வழி பிறக்கும்.

இதன் நோக்கம் என்ன?

குடும்பத்தில் நம்முள் மாற்றம், மற்ற குடும்பங்களில் நம்மால் மாற்றம்; சமுதாயத்தில் நாம், சமுதாயத்திற்காக நாம்.

(கட்டுரையாளர் ஆர்.எஸ்.எஸ்

குடும்ப பிரமோதன்

வட தமிழகப் பொறுப்பாளர்)