சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு

இன்று ‘தொண்டு’ என்றாலே நம்மவர்களில் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ அன்னை தெரசா பெயரைக் குறிப்பிடுகின்றனர். அன்னை தெரசா தனது தொண்டின் மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். ஏமாந்த மக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றினார்.

ஆனால் ஐரோப்பாவில் பிறந்த மார்க்கரெட் நோபிள் பாரதம் வந்தார். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தொண்டு செய்வதற்காக மட்டுமே தனது வாழ்க்கையை மாற்றி அமைத்தார்.

சுவாமி விவேகானந்தர் அவருக்கு அருமையான பெயரைச் சூட்டினார். ‘நிவேதிதா’ என்றால் நிவேதனம் – அர்ப்பணம் என்று பெயர். பாரத நாட்டுக்காகவே தன்னை அர்ப்பணம் செய்தவர் நிவேதிதா. பாரதத்தை தனது தாய்நாடாகவே கருதி பக்தி செலுத்தினார். தான் மேற்கத்தியவர் என்று தெரிந்ததும் சிலர் தன்னை மேடம் என்று அழைப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக தன்னை சகோதரி நிவேதிதா என்று அழைப்பதையே விரும்பினார்.

சகோதரி நிவேதிதா பற்றி இதுவரை ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. இந்தப் புத்தகம் 626 பக்கங்களுடன் எளிமையான தலைப்புகளில், அழகு தமிழில் வந்துள்ளது. ராமகிருஷ்ண மடம் துறவி சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதியுள்ளார். ஒவ்வொரு ஹிந்துவும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

கிடைக்குமிடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை. போன்: 24621110. விலை: 275