கொரோனா காலத்தில் குதுகலிக்க கிறிஸ்துமஸ் தேவையா?

கொரோனா பரவல் காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அவசியமா?

உலகம் முழுவதும் வரும் வாரத்தில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான பிரத்யேகமாக  கோரல் பார்ட்டிகள், நடனங்கள், இல்லங்களில் கிறிஸ்துமஸ் ஸ்டார், மரம் குடில் என அமர்க்களப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெயரில்

* கோடிக்கணக்கான ஓக் மரங்கள் கிறிஸ்துமஸ் மரம் எனப் பெயரிடப்பட்டு வெட்டி வீழ்த்தப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்தி  மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கிறது.

*தேவலாயங்களிலும் இல்லங்களிலும் எரிக்கப்படும் மெழுகுவர்த்தி வெளியிடும் வாயுவானது தீபாவளியின் போது  வெடிக்கப்படும் பட்டாசு மாசுவை விட பலமடங்கு மாசுவை ஏற்படுத்துகிறது.

*கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருந்த மத வழிப்பாட்டு தலங்கள் சிறுபான்மை தாஜாபோக்கு காரணமாக திறந்து விடப்பட்டுள்ளது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி காலங்களில் பரவும் கொரோனா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பரவாதா?

* அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி தொழில்நுட்பகழகம் (ஐஐடி) போன்றவற்றில்  பயிலும் மாணவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நள்ளிரவு தேவலாய வழிபாடுகள் மூலம் கொரோனா பரவாதா?

* கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது பிறருக்கு உதவுவதற்கு என்று சொல்லப்படும் நிலையில் இந்த வீன் கொண்டாட்டத்தை தவிர்த்து அந்த தொகையை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நலனுக்காக பயன்படுத்தலாமே.

* இதுபோன்ற தருணங்களில் சுயநல சிந்தனையை தவிர்த்து, ஓட்டு நலன் பாராது, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, மக்களின் உரிமையும் கூட.