கொரானா அறிகுறி அறிவது எப்படி?…

காய்ச்சல், தொடர் இருமல், சளியுடன் கூடிய மூக்கு எரிச்சல் ,தும்மல், அதீத களைப்பு, இவற்றுடன், சில தருணங்களில் வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால், அது கொரானா அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகாமையிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

கொரானா நோயானது பாதிக்க பட்ட  ஒருவரது எச்சில் அல்லது சளி மூலம், பரவ வாய்ப்பு உண்டு. இதற்காக தான், வெளியில் சென்றுவந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

ஒருவர் கொரானா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல், மற்றும் அதீத களைப்பு குறைக்கப்பட்டு, பூரண உடல் நலத்தை நோக்கிய சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. கொரானா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் பராமரிக்கப்படும் தனிமை வார்டு, நல்ல காற்றோட்டம் கொண்டதாக பரமாரிக்கப்படுகிறது.

எனவே, “வருமுன் காப்போம்” என்பதை அடிப்படையாக கொண்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முடிந்த வரை, முழங்கை வரை, கைகளை கழுவ வேண்டும். கொரானா அறிகுறி அறிந்தால், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கைகளை கழுவதும்போது, வெறுமனே, குழாய் நீரில் நீட்டிவிட்டு எடுத்துவிடக் கூடாது. சோப் போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்