கைலாஷ் – மானசரோவர் புனித யாத்திரை செல்ல இந்துக்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

கைலாஷ் – மானசரோவர் புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப் படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

துச்சேரியில் அனைத்து மத மக்களும் சமமாக பார்க்கப்படுகின்றனர். புதுச்சேரியில் மதம், இனத்தின் பெயரால் பாகுபாடு வரக்கூடாது என்பதற்காக ஹஜ் புனிதப் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி வழங்குவதைப் போல், கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக் கும் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரைக்கான நிதி உதவியை மத்திய அரசு நிறுத்தி விட்டாலும், புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது.

கைலாஷ்-மானசரோவருக்கு புனித யாத்திரை செல்லும் இந்துக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். இதனால் முதல் வர் நிவாரண நிதியில் இருந்து கைலாஷ் – மானசரோவருக்கு புனித யாத்திரை செல்லும் இந்துக்கள் ஒவ் வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.