கேலரி ஆஃப் பிரேவ்ஸ்

அருணாச்சலப் பிரதேசத்தில் 1962 சீன பாரதப் போரின் ஹீரோக்கள் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் ஹீரோக்கள் உள்ளிட்ட துணிச்சலானவர்கள் பற்றிய “கேலரி ஆஃப் பிரேவ்ஸ்’ என்ற கண்காட்சி, லோம் ருக்போ நகர், பாசிகாட்டில் உள்ள டோனி போலோ வித்யா நிகேதனில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் இதனை தொடங்கி வைத்தார்.அருணாச்சல பிரதேசத்தில் 1962 சீன பாரத போரின் போது துணிச்சலுடன் போரிட்ட பாரதத்தின் வீரர்களின் வீரம் பற்றிய அற்புதமான கதைகளின் தொகுப்பே இந்த கண்காட்சி.இதன் அனைத்து பதிவுகளும் குரூப் கேப்டன் மோஹோண்டோ பாங்கிங் பாவோ VM (Rtd) மூலம் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டன.போரின் போது பல மாவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இதில் ஒரு பரம் வீர் சக்ரா, பல மகாவீர் சக்ரா மற்றும் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.விருது பெறாத, ஆனால் உள்ளூர் மற்றும் எதிரிப் படைகளால் கௌரவிக்கப்பட்ட சில அறியப்படாத ஹீரோக்களின் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.ஜம்மு காஷ்மீரில் தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடிய அருணாச்சலப் பிரதேசத்தின் மாவீரர்களும் கண்காட்சியில் இடம்பெற்றது.அவர்களில் சிலர் வீரமரணம் அடைந்தவர்கள், அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, சேனா பதக்கம் போன்ற வீர விருதுகளைப் பெற்றவர்கள்.இந்த கண்டாட்சியை பல உயரதிகாரிகள், மற்றும் உள்ளூர்வாசிகள் கண்காட்சியைக் கண்டுகளித்தனர். பொது மக்களிடையே தேசம், சுதந்திரம், வீரர்களின் தியாகம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி மற்ற இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் நடத்தப்பட்டு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.