கேரளாவில் வென்ற ஆர்யா ராஜேந்திரன் எப்படி தேர்தேடுக்கபட்டார்? உண்மை நிலவரம் என்ன?

பந்தளம் நகராட்சித் தலைவராக பாஜக சார்பில் சுசிலா சந்தோஷ் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். பந்தளம் நகராட்சியின் தலைவர் பதவி பொது வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உரியது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது அல்ல. ஆனால் அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்ணை அமர்த்தி அழகு பார்க்கிறது பாஜக. இதுதான் சமூக நீதியின் அடையாளம். அது மட்டுமல்ல, பந்தளம் நகராட்சியின் துணைத்தலைவர் பதவியிலும் ரம்யா என்ற பெண்மணியை கொண்டு வந்திருக்கிறது பாஜக.

ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூத்த பெண் வேட்பாளர்கள் பாஜகவிடம் மண்ணை கவ்வியதால் வேறு வழியின்றி 21 வயது இளம்பெண்ணை மேயராக்கி விட்டு அவர்கள் விடும் அலப்பறை இருக்கிறதே.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார மையமாக இருக்கும் பொலிட்பீரோவில் இதுவரை எத்தனை பெண்கள், எத்தனை தலித்கள் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். என்று கூறுவார்களா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிரிந்த பிறகு 1964ல் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை 15 முறை பொலிட்பீரோ பதவிகளை மாற்றியிருக்கிறது. அதில் 255 உறுப்பினர்கள் பதவி வகித்து இதுவரை இருக்கிறார்கள்.

அதில் இதுவரை ஒருவர் கூட பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் கிடையாது. பெண்களில் பிருந்தா காரத்தை தவிர வேறு யாருமே பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தது கிடையாது. அதுவும் கம்யுனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் பொது செயலராக இருந்த போது 2005ல் தன்னுடைய மனைவியான பிருந்தா காரத்தை பொலிட்பீரோ உறுப்பினராக கொண்டு வந்தார். மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் அரசில் மொத்தமாக இருந்தது 2 பெண் அமைச்சர்கள் தான். தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட திருவனந்தபுரம் மேயர் பதவியை வேறு வழியின்றி ஆர்யா ராஜேந்திரன் என்கிற 21 வயது இளம்பெண்ணுக்கு அளித்து விட்டு ஏதோ சமூகப்புரட்சி என்று கூறுவது தான் நகைச்சுவை.

33 உறுப்பினர்களை உடைய பந்தளம் நகராட்சியில் 18 உறுப்பினர்களை வைத்திருக்கிற பாஜக, நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவராக பெண்களை கொண்டு வந்து இருக்கிறதே. இதில் இருந்து பெண்கள் முன்னேற்றம், சமூக மாற்றம் இவற்றில் யார் முன்னோடி என்று தெரிந்து கொள்ளுங்கள்.