கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் பாஜக முன்னிலை

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டமாக  நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 22, 28ம் தேதிகளில் 82,219 இடங்களுக்கு இரண்டு கட்டமாக இந்த தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 91664 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சைகளின் சின்னத்தில் நடைபெற்றது. அரசியல் கட்சிகள் தங்களின் ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது. இன்று மதியம் 1மணி நிலவரப்படி ஆளும் பாரதீய ஜனதா கட்சி 4755 இடங்களில் அமோக வெற்றியை ஈட்டி உள்ளது. பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி 2575 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 1343 இடங்களையும், மற்றவர்கள் 993 இடங்களையும் வென்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழுமையான முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.