குரல் கொடுப்பார்களா?

அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே நகரின் கூவம் ஆற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டது. விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் இரு தினங்களுக்கு முன் எந்த நோட்டீசோ, மாற்று இடமோ தராமல் அந்த குடிசை வீடுகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். வீடுகளை இடித்து வெளியேற்றப்பட்டதால், பொதுமக்கள் கண்ணீருடன் வீதிகளில் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் உலுக்கியது. ஆனால், பட்டியலின மக்களின் உரிமைக்காகவே கட்சியை நடத்தி வருவதாக கூறும் திருமாவளவன் இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனது கட்சி நிர்வாகி வன்னியரசு மூலம் இது தி.மு.க அரசு செய்தது என்பதை சுட்டிக் காட்டாமல், “கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொடங்கிய சேரி மக்களின் ஒப்பாரி ஓலங்கள் இன்னும் தொடர்வது வேதனையிலும் வேதனை” எனக் கூறியுள்ளார். கடந்த அ.தி.மு.க அட்சியின் போது சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 370 குடிசைகளை அகற்றப்பட்டதற்கு அரசைக் கண்டித்து கூவம் நதியில் இறங்கி அப்பகுதி மக்களுடன் போராடிய இயக்குநர் பா. ரஞ்சித், தற்போது மௌனம் காக்கிறார். இதேபோல வை.கோ, சீமான், கம்யூனிஸ்ட்டுகள் என யாரும் தி.மு.கவிற்கு எதிராக இதுவரைவாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.