குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீகளை ஒன்றும் செய்யாது – டெல்லி ஜூம்மா மசூதி தலைவர் கருத்து

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லி பல்கலை.,யில் துவங்கிய வன்முறை போராட்டம், நாடு முழுவதும் பரவி உள்ளது. போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டம் மற்றும் இதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து இஸ்லாமிய இயக்க தலைவர் இமாம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், போராடுவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை. போராடுவதை யாரும் தடுக்க முடியாது. அதே சமயம், அது கட்டுக்குள் இருக்க வேண்டியதும், உணர்வுகள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவிற்கும் வித்தியாசம் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவு சட்டமாக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், பாக்., ஆப்கான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த முஸ்லீம்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியாது. இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.