குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஈரோட்டில் நடந்த பேரணி

8.1.2020ந் தேதி  புதன் கிழமை  தேசிய குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஈரோட்டில் மாலை 4.30 மணி அளவில் ஒரு மிகப் பெரிய பேரணி நடைபெற்றது.  இப்பேரணியைில் அகில இந்திய செயலாளர் திரு. சுனில் தியோதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   இந்த பேரணியில் மாநில பொதுச் செயலாளர் திருமதி வானிதி ஸ்ரீனிவாசன், முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொருளாளர் திரு. எஸ்.ஆர்.சேகர்,  மாநில செயலாளர் திருமதி டாக்டர் சி.கே. சரஸ்வதி  தேசிய இளைஞர் அணியின் துணைத் தலைவர் திரு. முருகானந்தம் உள்ளிட்ட மாநில, நிர்வாகிகளும்,  மாவட்ட தலைவர்களும்,  கோட்ட பொறுப்பாளர்களும் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

             இந்த பேரணியில் கலந்து கொண்ட அகில இந்திய செயலாளர் திரு. சுனில் தியோதர்,   1947-ல் நாடு விடுதலை பெற்ற போது, மத ரீதியாக பாகிஸ்தான் உருவானது.  பாகிஸ்தான் என்ற நாடு உருவானபோதே. சிறுபான்மையின இந்துக்கள், சீக்கியர்கள் தங்களின் உரிமைக்காக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  காந்தி, நேரு , பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க படும் என கூறியதால்,  நேரு, லியாகத் அலிகன் உடன்பாடு ஏற்பட்டது.  எழுத்து வடிவில் மட்டும் உடன்பாடு இருந்தது.  முந்தைய காங்கிரஸ்  ஆட்சியில் பாகிஸ்தானிலிருந்து பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு வந்த இந்துக்கள் , சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என கூறி வந்தார்கள்.    மோடி திருத்தம் செய்தது,  இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கோ அல்லது சிறுபான்மையினரை வெளியேற்ற கொண்டு வந்தது அல்ல.    2015 டிசம்பர் 31க்கு பின்னர் சட்ட விரோதமாக உள்ளே நுழைந்த அனைவரும் கட்டாயமாக  வெளியேற்றப்படுவார்கள்.   இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், பாரதத்தில் வாழ அச்சப்படுவதாக கருதினால், தராளமாக அவர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது பங்களா தேஷ் நாட்டிற்கோ சென்று குடியுரிமை வாங்கி கொள்ளலாம்.

One thought on “குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஈரோட்டில் நடந்த பேரணி

  1. ஐயா, சுனில் தியோதர் அல்ல! தேவ்தர்! சரிசெய்யுங்கள்!

Comments are closed.