அன்புள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு விஜய் அவர்களே, தங்களுக்கு மதச் சார்பு இல்லாதது போல் தோன்றுகிறது. ஆனால் அரசுப் பணி நியமனங்கள் பலவும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகிறது.
முகலாயர் கட்டுப்பாட்டிலிருந்தும் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்தும், தப்பி வந்த ஹிந்துக்கள் நாங்கள். மீண்டும் ஆங்கிலேயக் கலாச்சாரத்தின் ஆழமின்மையை நோக்கி எங்கள் கல்வியும் நெறிமுறைகளும் திருப்பப் படுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. கடந்த ஆட்சியில் ஹிந்துக்கள் பட்ட அவமானம் கொஞ்சமில்லை. தர்மமே தெரியாதவர்கள் சநாதனத்தை அவமதித்தார்கள். நல்லவேளை, ஆட்சி மாறியது.
சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் பகவத் கீதை மேற்கோள் காட்டப்பட்ட போது பதறிப் போன ஒருவர் பிறகு இறைவன் எனக் குறிப்பிடும்போது Jesus என்று உடனே சொன்னதையும் கேட்டேன். யாரிடமிருந்தும் அவர்கள் பழகிவந்த மதத்தைப் பிரிக்க முடியாது தான். அதேபோல் வேறொரு மதத்தை திணிக்கவும் முடியாது. ‘From fire to the frying pan’, என்பது போல் எங்கள் நிலைமை ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி நெருடலில்லாமல் இருந்தது. நன்றி. உங்கள் அரசு எல்லாருக்குமானது என்று சொன்னீர்கள். மக்கள் பணத்தைத் தொடமாட்டேன் என்றீர்கள். அதை இதுவரையில் கடைபிடிக்கவும் செய்கிறீர்கள். அதற்கும் நன்றி. அதேபோல் கிறிஸ்துவ ஆதிக்கம் இல்லாமலும் பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். அரசுப் பணிகளில் எல்லாருக்கும் சமமாக வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். “Justice must not only be done, but must also be seen to be done.” என்பது பொன்மொழி. வணக்கம்.
கட்டுரையாளர்: ஷோபனா ரவி
கதாசிரியர் மற்றும் முன்னாள் செய்தி வாசிப்பாளர் வலைத்தளபதிவு