காஷ்மீர் சட்டதுக்கு தீர்வு கண்டு உள்ளது மத்திய அரசு, பொது பட்டியல் சட்டம் இனி காஷ்மீருக்கும்

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், செய்தியாளா்களிடம் விவரித்தாா். அவா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும், அவ்விரு யூனியன் பிரதேசங்களும் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன.

அதற்கான அடுத்த நடவடிக்கையாக பொது பட்டியலின் கீழ் உள்ள 37 மத்திய சட்டங்களை ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பு இந்தச் சட்டங்கள், ஜம்மு-காஷ்மீரைத் தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டிருந்தன.

அதே சட்டங்களை ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்த முடியுமா என்று சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், அதற்கு மத்திய அரசு தீா்வு கண்டுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் தேவைக்கு ஏற்ப சற்று திருத்தங்களுடன் இந்த சட்டங்களை அமல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.