குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள் தற்போது மக்கள்தொகை பதிவையும் எதிர்ப்பது ஏன்

தேசிய குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்த  பின்னர் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமைக்கு ஆபத்து நமது அடையாளத்தை குடியுரிமையை தக்கவைத்துக்கொள்ள வீதிக்கு வாருங்கள் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அறைகூவல் விடப்படுகிறது. ஆங்காங்கே இதற்கென கூட்டம் கூட்டி டெல்லியில் ஷாகின்பாகில் கூடி கும்மாளமிட்டுக்கொண்டிருப்பதனை போன்று சென்னையில்  தண்டயார்பேட்டை,  புளியந்தோப்பிலும் போராட்டம் என்ற பெயரில் தினசரி அலப்பறைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதனை காரணம் காட்டி ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பையும் புறக்கணிக்க  கோருகிறார்கள் . தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இவர்களுக்கு என்ன பிரச்னை?  புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் அப்பாவின் பிறந்த ஊரையும் அவர்கள் கொண்டாடும் திருவிழாக்களையும் கேட்டுள்ளார்கள் . மேலும் நீங்கள் எங்கு  பிறந்தவர்  என்ற தகவலையும் கூடுதலாக கேட்டுள்ளார்கள் இதனை சொல்லுவதில் என்ன பிரச்சனை . நாமெல்லாம் அப்பா அம்மா பேர் தெரியாத,   இல்லாத அனாதைகளா அல்லது ஊர் பேர் தெரியாத பொறம்போக்குகளா . எதற்கு எந்த வீண் பிடிவாதம் என்னவென்று புரிய வில்லை .
       நமது நாட்டின் வழக்கமே அவர்களை பற்றி விசாரிக்கும் போது தனது சொந்த ஊர் அப்பா அம்மா பிறந்தஊர் குலப்பெருமை ,குடும்ப பெருமை பேசி தகவலை பரிமாறி கொள்வதுதுதான் வழக்கம். அது இந்திய பூர்விக குடிகளுக்குள் எந்த பிரச்னையும்  இருக்காது ஏனென்றால் இங்குள்ள இந்துக்களும் முசுலீம்களும் கிறிஸ்தவர்களும் ஆண்டாண்டுகாலமாக  இங்கேயே பிறந்து வளர்ந்து வருபவர்கள் .அவர்கள் இந்த சிறிய விஷத்தை சொல்லுவதற்கு தயக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கிறார்கள் என்றால் அதில் அதோ உள்நோக்கம் இருக்கிறது  என்றுதானே அர்த்தம் .
 தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குடும்பத்தலைவரின் பெயர் தலைவியின் பெயர் அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர் அவர்களின் வயது கல்வித்தகுதி ஆணா , பெண்ணா  அவர்கள் சம்பாதிப்பவர்கள் என்றால் அவர்களின் வருமானம் எவ்வளவு ,குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் , பிறந்ததேதி , ஆதார் எண் , பாஸ்போர்ட் இருந்தால் அதனுடைய நம்பர் , கல்வி தகுதி போன்ற விவரங்கள் கேட்கப்படும் அது ஓவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை மாறுபடும் சென்றமுராய் மத ரிதியான தகவல் வேண்டுமென்றே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மறைக்கப்பட்டது. தற்போது இந்த அரசு அந்த  சேர்த்து கேட்கிறது கூடுதலாக அப்பாவின் பிறந்த உறையும் அந்த குடும்பம் கொண்டாடும் பண்டிகையையும் கேட்கிறது. எதனை சொல்லுவதில் என்ன தயக்கம் எதனை சொன்னால் குடிமுழுகி போய்விடுமா என்றால் ஆமாம் குடிமுழுகித்தான் போகும்  யாருக்கு என்றால் சட்டவிரோதமாக கள்ளக்குடியேறிகளாக இந்தியாவிற்குள்  பங்களாதேஷில் இருந்தும் பர்மாவில் இருந்துவந்துள்ள ரொகிங்கியாவிற்கும் இலங்கையில் இருந்து வந்துள்ளமுஸ்லிகளுக்கும் பாதகமாக இருக்கும். இந்த நாடு ஒன்றும் வந்தேறிகளின் வசிப்பிடம் இல்லை பாகிஸ்தானியர்களுக்கும் பங்காளதேசிகளுக்கும் அடுத்ததாக பர்மாவிலிருந்து வரும் ரொகிங்கியாக்களுக்கும் குடியுரிமை கொடுக்க என்று அரசாங்கம்  சொல்லுவதை எப்படி எதிர்க்க முடியும்.
உண்மையில் இந்த கேள்விகள் எல்லாம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த நாட்டில் வறுமை எவ்வளவு  குறைந்துள்ளது. மகளிர் ஆண்கள் விகிதாசாரம்  கல்வி வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விவரம்.எழுத்தறிவு இளைஞர்கள் முதியோர்  கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தோர் வருமானத்தில்  குறைவானவர்கள் என்று பட்டியலிட இது போன்ற விவரங்கள் அவசியமாக உள்ளது எதனடிப்படியில் திட்டங்களை தீட்டி அவற்றை செயல்படுத்த இவைகள் அடிப்படை காரணமாக அமையும். தற்போது அகதிகள் பிரச்னை அதிக அளவில் உள்ளதாலும் அண்டைநாடுகளில் இருந்து ஊடுருவல்கள் மூலம் கள்ளத்தன குடியேற்றம் அதிகமாக உள்ளதாலும் நாடுமுழுவதும் இது போன்ற அடிப்படை தகவல்களை திரட்ட வேண்டியது  அவசியமாகியுள்ளது.
உதாரணமாக நான் சென்னைக்கு 1995ம் ஆண்டு செப்டம்பரில்  தேடி வந்தேன் . அதற்க்கு முன்னர் திருச்செந்தூர் அருகிலுள்ள ஊரில் வசித்து வந்தேன் இன்னமும் எனது பெற்றோர் அங்குதான் வசித்து வருகிறார்கள் . காயாமொழியில் ஆரம்பக்கல்வியையும் பணிக்கநாடார்க்குடியிருப்பில் மேல்நிலைக்கல்வியையும் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லுரியில் இளங்கலை வணிகவியல் கல்வியையும் முடித்துள்ளேன் இதனை நான் எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியும் அரசு இந்த விஷத்தைதான்  கேட்கிறது ஏன் என்றால் கிராமத்தில் இருந்து வேலை வாய்ப்புகளை தேடி எத்தனை பேர் நகரத்திற்கு  இடம் பெயர்ந்துள்ளார்கள் என்ற கணக்கெடுப்பதற்கு வசதியாக இருக்கும் மேலும் சென்னையில் ஓட்டு போடுவதற்கு வாக்காளர் பட்டியலில்   பேர் சேர்க்க விண்ணப்பம்  கொடுக்கும் போது இதற்கு முன்னர் எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்திர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் . அப்போதுதான் நீங்கள் ஏற்கனவே இடம் பெற்றுள்ள  தொகுதியில் உள்ள வாக்குகளை நீக்க முடியும் பின்னர் புதிதாக சென்னையில் உள்ள தொகுதியில் புதிய வாக்காளராக இடம்பெற வசதியாக இருக்கும் இது சாதாரணமாக எல்லா சூழ்நிலையிலும் கேட்க படும் கேள்வி . தற்போது அது மாதிரியான கேள்வியைத்தான் புதிதாக கேட்டுள்ளார்கள். அதனை சொல்ல என்ன தயக்கம் வேண்டி இருக்கிறது.
 நம்மிடையே தற்போது கேட்டகப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது இந்திய குடிமகன் ஓவ்வொருவருக்கும் கடமையாகவுள்ளது கேட்கப்படும் கேள்விகள்   சர்ச்சைக்குரியதாக எதுவும் இல்லை.
சொல்லமுடியாத அளவுக்கு கேள்விகள் விகல்பமாக உள்ளதா இந்த பெண் உனக்கு எத்தனாவது மனைவி என்றோ இவள் உண்மையிலேயே உன்மனைவிதான இல்லை வேறு நபரின் மனைவியை இழுத்து வந்து விட்டாயா என்று சர்ச்சைக்குரிய கேள்வியை எதையும் கேட்க வில்லையே . இந்த கேள்விகள் இந்திய பூர்விக குடிகளை பயமுறுத்தாது . அவர்கள் அச்சப்பட தேவை இல்லை. மாறாக  சட்டவிரோத பங்களாதேஷ் பர்மாவின் பர்மாவின்  , ரோஹிங்கிய நபர்களுக்கு ஆபத்தாக முடியும் ஏனென்றால் அவர்கள் தான்  இந்த கேள்விகளுக்கு உடனடியாக சரியான பதிலை சொல்ல முடியாது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு  நபரும் அப்பாவின் ஊரைமட்டுமல்ல தாத்தாவின் ஊரையும் பாட்டன் , முப்பாட்டன் ஊரையும் தெரிந்தே வைத்துள்ளான் அதனை பெருமையாகவும் கருதுவான். அப்படியெதுவும் எனக்கு தெரியாது என்றால் அவனின் குடியுரிமையை இந்த நாடு சந்தேகப்படுவதில் எந்த தவறும் இல்லை என்பதே தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் புதிய கேள்விகளின் கேள்விகளின் நோக்கம்.
  சட்டவிரோதமாக வீதியில் கூடி ஜனநாயக போராட்டம் என்றால் அதனை எப்படி வீதியில் தொடர்ந்து அனுமதிக்க முடியும். ஒரு சாதரண போராட்டத்திற்கே ஏற்பாடு மற்றும் செலவாக பல ஆயிரங்கால் தேவை ஆனால் இவர்கள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாய் மூன்று வேலை உணவு  ஆறுவேளை வழிபாடுடன் தொடர்ந்து மாத கணக்கில் போராடுகிறார்கள் என்றால் அவர்களின் போராட்ட பின்னணியில்  செலவுக்கு பணத்தை
வழங்குவது யார் ? அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன ?  என்றெல்லாம் ஆராய்ந்தால் அதன் பின்னணியில் தேசவிரோத   உள்நோக்கம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். தெரிந்தோ  தெரியமலோ மதரஸாக்களில் அவர்களின் குடியிருப்புகளின் அருகில் பல ஆயிரம் அந்நிய நாட்டவர்களை குடியேற அனுமதித்துவிட்டு தற்போது அவர்களின் விவரங்களை அரசு கேட்கும் போது மதத்துக்கு  ஆபத்து குடியுரிமை க்கு ஆபத்து வாழ்விடத்துக்கு ஆபத்து எல்லோருக்கும்  ஆபத்து நம்ம எல்லோரையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப போறாங்க என்றெல்லாம் ஓலமிடுவது யாரை ஏமாற்ற என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. சட்டத்தை பற்றி புரியவில்லை என்றால் அதனை விளக்கலாம் ஆனால் சட்டத்தையே வேண்டாம் என்பவர்களிடம் எண்ணத்தை விளக்குவது முடிவில் கள்ளக்குடியேறிகளை அடையாளம் காணப்பட்டு மொத்தமாக வெளியேற்றப்படும் போது அவர்களுக்கு துணை போனவர்களும்…