எதிர்க்கட்சிகள் பிரிவினையை தூண்டுகின்றன – எச்.ராஜா

‘போராட்டத்தை துாண்டி, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், நாட்டில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்,” என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில், அவர் கூறியதாவது:

தி.மு.க.,வை சேர்ந்த பிரசன்னா என்பவர், பிரதமரை கேவலமாக பேசுகிறார்; அவரை, தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை. பட்டியலினத்தவர்களை அவதுாறாக பேசிய, ஆர்.எஸ்.பாரதியை, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தால், நாட்டில் யாருடைய குடியுரிமையும் பாதிக்கப்படாது என, பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., – காங்., – கம்யூ., கட்சியினர், முஸ்லிம்களை துாண்டுகிறார்கள்; நாட்டில், பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.