காவல்துறை இதழில் ஹிந்து விரோதம்

கேரள காவல்துறை சங்கத்தின் வருடாந்திர வெளியீட்டு இதழில், ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில், ஹிந்து மதத்தின் இதிகாசமான ராமாயணம் பற்றிய மிகவும் ஆபாசமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன, மேலும் ஹிந்துக் கடவுளான அனுமனைப் பற்றிய ஆத்திரமூட்டும் கருத்துக்களும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அதில், அனுமனுக்குத் தன் பெற்றோரைப் பற்றித் தெரியாது என்றும் சீதை மற்றும் லட்சுமணன் பற்றிய ஆபாசமான மற்றும் மோசமான கருத்துகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் குழுவில் காவல்துறை ஊழியர்களையே உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இந்த இதழில் ‘குவாண்டம் லீப் அண்ட் டிசம்பவர்மென்ட்’ என்ற தலைப்பில் இடதுசாரி அரசியல் ஆதரவாளரான வி.எஸ் அஜித் என்பவர் எழுதிய இத்தகைய ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. இதனால், அங்கு கடும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தக் கட்டுரையை திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.