காங்கிரஸ் கட்சியின் அபத்தமான தீர்மானம்

நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்
கட்சியின் கூட்ட்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்தியா நாட்டின் இறையான்மைக்கு எதிராகவும், அரசியல்
சாசனத்திற்கு புறம்பாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று முக்கியமான விஷயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொது மக்களை வன்முறையில் செயல்பாட தூண்டு கோளாக அமைந்துள்ளது தீர்மானம்.
முக்கியமான எதிர்கட்சிகள் காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தில் பொய்யான
கருத்தை தெரிவித்துள்ளார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும்,
பல்கலைகழங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன என குறிப்பிட்டுள்ளது தவறான கருத்தாகும். ஏன்
என்றால், போராட்டங்களை நடத்தியவர்கள் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களை முன்னிலைப் படுத்தியே எதிர் கட்சிகள் போராட்டங்களை நடத்தின. தீர்மானத்தின் வாசகம் – என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள அனைத்து மாநில முதல்வர்களும், தங்கள் மாநிலங்களில் என்பிஆர் பணிகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்த வாசம், மாநில அரசை மத்திய அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாக அமைந்துள்ளது. 1975-ல் அவசர நிலை பிரகடனப்படுத்திய போது, ஜெயபிரகாஷ் நாராயணன் வரி கொட இயக்கத்தை நடத்திய போது, பாசிஸ்ட்டாக சித்தரித்த காங்கிரஸ், இப்பொழுது மட்டும் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசை தூண்டலாமா. இது வன்முறையை தூண்டும் விதமாகவும், மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்கள் போராட வேண்டும் என அரசியல் சாசன விதி முறைகளுக்கு புறம்பாக தீர்மானம் அமைந்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான தயாரிப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது. இது 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிராக அமைந்துள்ளது. பத்தாண்டுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஏன் எடுக்க கூடாது என்பதற்குறிய காரணத்தை தெரியப்படுத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதிக்கும், தொகுதி வரையரைக்கு முட்டுக் கட்டை போடுவதாக அமையும். 2008-ல் அஸ்ஸாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதின் விளைவு மோசமாக அமைந்தது என்பதை காங்கிரஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க முக்கியமான காரணம், 1985-ல் போடப்பட்ட உடன்படிக்கையின் படி, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து யாரையும் வெளியேற்றவில்லை. மாறாக ஆயிரக்கணக்கான பங்களா தேஷ் மற்றும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து விடும் என்ற அச்சம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது.

தீர்மானத்தின் மற்றொரு வாசகம் ஒவ்வொரு இந்தியரும் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும்
விதமாக ஜனவரி 23ந் தேதி கொண்டாட வேண்டும் என்பதாகும். இத்தனை ஆண்டுகாலம், சுபாஷ் சந்திர போஸின்
ஆவணங்களை வெளியிடாமல் இருந்த சோனிய காங்கிரஸ் , மத்திய அரசை எதிர்க்க போஸ் பெயரை பயன் படுத்துகிறார்கள். திருமதி சோனியா காந்தி மாநில முதல்வர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள்
விடுக்கும் முன், 2003 டிசம்பர் மாதம் 18.ந் தேதி வாஜ்பாய் க்கு எழுதிய கடிதம் என்ன என்பது பற்றியும், 2012 ஏப்ரல் மாதம் 20-ல் தருண்கோகய், மன்மோகன் சிங்க்கு எழுதிய கடிதத்தில், பங்களா தேஷ் நாட்டிலிருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதைப் பற்றியும் எதிர்கட்சிகளிடம் விளக்கமாக எடுத்து கூறிய பின்னர் தீர்மானத்தை இயற்றியிருக்கலாம்.

2016-ல் ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில், பயங்கரவாதி அப்சல் குருவுக்கும், மும்பை குண்டு வெடிப்பின்
சூத்திரதாரி யாகூப் மேமனுக்கும் ஆதரவாக போராட்டங்களை நடத்திய போது வாய் திற்க்காத காங்கிரஸ், நாட்டை
துண்டு துண்டாக்குவோம் என முழக்கமிட்ட போது மௌனியாக காட்சியளித்த காங்கிரஸ், இப்பொழுது வாய் திறக்கிறது. மன்மோகன் சிங் அத்வானிக்கு கடிதம் எழுதிய போது தெரியாத காங்கிரஸ், 1971-ல் ஊடுருவிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க உத்திரவிட்ட போது வாய் திறக்காத காங்கிரஸ், தங்களின் வாக்கு வங்கிக்கு ஆபத்து என்றவுடன் கூச்சல் போடுகிறது. கல்விச் சூழலை மோசமாக்கும் இடதுசாரி ஆர்வலர்கள் – 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் கல்விச் சூழலை, இடதுசாரி ஆர்வலர்கள் மோசமாக்கி வருவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். டாக்டர் ஹரி சிங் கவுர் பல்கலைகழக துணை வேந்தர் திரு. ஆர்.பி. திவாரி, தெற்கு பிஹாரின் மத்திய பல்கலைகழக துணை வேந்தர் எச்.சி.எஸ். ரத்தோர், சர்தார் பட்டேல் கல்கலைகழக துணை வேந்தர் திரு. ஷிரிஷ் குல்கர்னி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்படி கடிதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2
இந்த போராட்டம் வன்முறையாகவே மாறி வருகிறது. இவ்வாறு வன்முறையாக மாறுவதற்கு இடதுசாரி மாணவர்
அமைப்பினரே மு்ககியமான காரணகர்த்தாக இருக்கிறார்கள். மாணவர் அரசியலின் பெயரில், சீர்குலைக்கும் தீவிர இடதுசாரி நிகழ்ச்சி நிரல் பின்பற்றப்படுவதை நாங்கள் திகைப்புடன் கவனிக்கிறோம். ஜே.என்.யு முதல் ஜாமியா (மிலியா இஸ்லாமியா), ஏ.எம்.யூ (அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்) முதல் ஜாதவ்பூர் வரை வளாகங்களில் அண்மையில் நடந்த நிகழ்வுகள் இடதுசாரி ஆர்வலர்களின் ஒரு சிறிய கூட்டணியின்
ஷெனானிகன்களால் மோசமடைந்து வரும் கல்விச் சூழலுக்கு நம்மை எச்சரிக்கிறது, "என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். இடதுசாரிகளின் மனப்போக்கை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதிகபட்ச கோரிக்கைகளை வலியுறுத்தி , வேலை நிறுத்தம், தர்ணா, முழு அடைப்பு, என போராட்டங்களை கையிலெடுத்து வருவது, அனைவருக்கும் நன்கு தெரியும். நம் நாட்டில் இடதுசாரிகள் நடத்தும் தனி நபர் தாக்குதல், பொது வெளியில் அவதூறாக பேசுவது, தங்கள் கொள்கைக்கு இணக்கமாக இல்லாதவர்களுக்கு எதிராக நடததப்படும் தாக்குதல்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்ற குற்றச்சாட்டையும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் காரணமாகவும், இடதுசாரிகளின் அரசியல் போக்கால், ஏழை மாணவர்களும், ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும், பாதிக்கப்படுகின்றனர். இதனால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டமைக்காமல் தவிக்கின்றனர். இடதுசாரிகள், மாற்று அரசியல் மற்றும் தங்கள் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை கூட அனுமதிக்காதவர்கள். வரம்பு மீறி பேசிய நீதிபதி – ஜூம்மா மசூதி முன் போராடினால் என்ன பிரச்னை என்ற கேள்வியை எழுப்பிய டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லாவு நீதிபதி என்பதை மறந்து விட்டு போலீஸ் தரப்பிடம் வரம்பு மீறி பேசியுள்ளார்.

போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, மக்கள் அமைதியாக போராடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்திருக்கின்றன என்பதை மறந்து விட்டு நீதிபதி பேசியுள்ளார். ஜூம்மா மசூதி முன் நடந்த போராட்டங்கள் எப்படி முடிந்தது என்பதையும் நீதிபதி சற்றே ஆய்வு செய்து விட்டு தனது கருத்தை கூறியிருக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் அறிய வேண்டிய தகவல்கள், முறைப்படி பாராளுமன்றத்தல் சொல்லப்படவில்லை, எனவே தான் மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என நீதிபதி நீதிமன்றத்தல் கூறியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் போது, உள்துறை அமைச்சர் உறுப்பினர்களின் அனைத்து சநதேகங்களையும் தீர்க்கும் விதமாக பல மணி நேரம் விளக்கியது நீதிபதிக்கு தெரியாது போல் தெரிகிறது. பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர், This bill does not do injustice to any one. You always say that minorities must get special protection. Then why not give special protection to minorities from Pakistan. Bangladesh and Afghanistan எடுத்துக் கூறியதை மறந்து விட்டு பேசுகிறார். நீதிபதியின் பணிவான கவனத்திற்கு 1985-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு 1992-ல் தீர்ப்பு வழங்கியது சரியான முறையா என்பதை எப்போதாவது நீதிபதிகள் சிந்தித்தது உண்டா. ளு பார்லிமென்ட் முன் போராடிய பலர், தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் பிற்காலத்தில் வளர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சந்திரசேகர் ஆசாத் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி, அவர் போராட அவருக்கு உரிமை உள்ளது என்றும் நீதி மன்றத்தில் பேசியுள்ளார். வளர்ந்து வரும் அரசியல் தலைவர் என புகழாரம் சூட்டிய சந்திரசேகராக ஆஸாத், 2018-ல் பூனாவில் நடந்த 200 வது பேரணியில் அர்பன் நக்ஸல்களுடன் கலந்து கொண்டவர். ஜே.என்.யூ வில் நாட்டை துண்டாடுவோம் என கோஷமிட்ட உமர் கலீத்துடன் இணக்கமாக இருப்பவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் போது, குள்ளநரித்தான் தப்பித்து போலீஸூக்கு தண்ணிக்காட்டியவர் தான் நீதிபதி புகழாரம் சூட்டியவர். இப்படிப்பட்ட தலைவர்களுக்கு ஆதரவாக நீதிபதியிருந்தால், நீதியின் மீது பொது மக்களுக்கு எவ்வாறு மரியாதை வரும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.