கஷ்டத்திலும் தன்னம்பிக்கை

சுவாமி விவேகானந்தர் பிரான்ஸ் சென்றிருந்vivekanandaதபோது ஒரு குதிரை வண்டியில் பயணம் செய்தார். அந்த குதிரை வண்டிக்காரர் மிகவும் நேர்த்தியான முறையில் பிரெஞ்சு மொழி பேசுவதைக் கவனித்து, அவரிடம்  பேசிக் கொண்டே வந்தார். சுவாமிஜி அவரிடம், உங்களின் வீடு, குடும்பம், சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று கேட்டார்.

குதிரை வண்டிக்காரர் கூறியதாவது: சமீபத்தில் பாரிஸில் ஒரு பெரிய வங்கி திவாலானதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் அதிபர் நான்தான். இப்போது என் சொத்துக்களை மதிப்பீடு செய்கிறார்கள். அது முடிய சில காலம் பிடிக்கும். அதனால் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாமே என்று நினைத்து தற்போது ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். குடும்பச் செலவுகளுக்காக இந்த வண்டியை வாங்கி ஓட்டி வருகிறேன். மதிப்பீடு முடிந்ததும் கைக்குக் கிடைக்கிற சொத்தைப் பயன்படுத்தி மீண்டும் வங்கியைத் தொடங்குவேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இதைக் கேட்ட சுவாமிஜி கூறினார்: இதோ, இவர்தான் உண்மையில் வேதாந்தியாக வாழ்கிறவர். தனக்கு கஷ்டம் வந்தபோதும் சூழ்நிலை தன்னை பாதிக்க அனுமதிக்கவில்லையே மனிதர்”